Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - அவள் ஒருமாதிரி! - ரவை - 5.0 out of 5 based on 1 vote

வினிதா அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சந்தோஷத்தில் ஆழ்த்தினாள். வினிதாவின் கட்டுக்குள் தங்கள்மகன் அடங்கி சீட்டாட்டம், ரேஸ் பழக்கங்களை விட்டுத் தொலைத்திருப்பான் என எதிர்பார்த்து, எதற்கும் அந்த நல்ல முன்னேற்றத்தை வினிதாவிடமிருந்தே தெரிந்துகொள்ள விழைந்தனர்.

"வினிதா! வினோத் தினமும் வீட்டுக்கு ஆபீஸிலிருந்து எத்தனை மணிக்கு திரும்பிவரான்?"

"ஆபீஸ்வேலை முடிஞ்சதும், வந்துடுவார்."

"ஆபீஸ் ஐந்துமணிக்கு முடிந்ததும், வந்துவிடுவானா?"

வினிதா வாய்விட்டு சிரித்தாள்.

"ஏம்மா சிரிக்கிறே? நாங்க கேட்டதிலே......?"

"அதில்லே, ஆபீஸ் பத்து மணிக்கு துவங்கி ஐந்துமணிக்கு முடிவதெல்லாம், குமாஸ்தா, பியூன்களுக்குத்தான். உங்க மகன் மேனேஜர்! அவர் அந்தமாதிரி, பள்ளிக்கூட மணி அடித்தவுடனே மாணவர்கள் வெளியிலே ஓடிவருவதுபோல, வரமுடியாது. அன்றைய வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டுத்தான் வரமுடியும்....."

வினிதா இப்படி பிடி கொடுக்காமல் பேசுகிறாளே என வருத்தம்!

பொறுமையிழந்து, நேரடியாகவே கேட்டார்கள்.

"வினிதா! கல்யாணமாகி தனி குடித்தனம் நீங்க துவங்கியபோது, நாங்க உன்னிடம் சொன்னதை மறந்துட்டியா? சீட்டாட்டறதையும், குதிரைப் பந்தயம் போறதையும் விட்டொழிஞ்சிட்டானா? உன்னை மாலைநேரத்திலே நாலு இடங்களுக்கு அழைத்துப்போய் காட்டுகிறானா? சனி, ஞாயிறிலே உன்னோட எல்லா நேரமும் இருக்கானா?"

"வினோத் உங்க மகன்தான்! ஆனா, அவர் இப்ப சிறுபிள்ளையில்லே! ஒரு குடும்ப தலைவர்! ஒரு ஆபீஸ் மேனேஜர்! அவருக்கு பொறுப்பிருக்கு, அதை அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார், என்னை பிரியமா கௌரவமா வசதியா வைத்திருக்கிறார். நான் அவரைவிட வயதில் இளையவள்! அவருக்கு புத்திமதி சொல்லலாமா? சட்ட விரோதமா எதையும் அவர் செய்யலே, செய்யமாட்டார், ஏன்னா நீங்க அவரை அப்படி வளர்க்கலை! உங்க வாழ்க்கையை நீங்க உங்க இஷ்டப்படி வாழ்வதுபோல, அவர் வாழ்க்கையை அவர் இஷ்டப்படி வாழ்கிறார். ஒரு பொறுப்புள்ள கணவனா, என்னை கண்ணியமா வசதியா சந்தோஷமா நடத்துறாரு, உங்களுக்கும் எந்தவிதமான அவமானம், அகௌரவமோ வராம கவனமா நடத்துக்கிறாரு........"

"அதெல்லாம் சரிம்மா! நாங்க வயசிலே பெரியவங்க! வாழ்க்கையிலே நல்லது, கெட்டது பார்த்தவங்க! தேர்ந்தெடுக்கிற பாதை போகப்போக நல்லதிலே முடியுமா, கெட்டதிலே முடியுமான்னு புரிஞ்சவங்க! இன்னிக்கு இந்த ரெண்டு பழக்கங்களும் அவனை பாதிக்கலைங்கிறது, நல்லதுதான். ஆனா, ஒரு எச்சரிக்கை! நீ வாழ்க்கையிலே இப்பத்தான் காலடி எடுத்துவைத்திருக்கே! உனக்கு சில உண்மைகள் தெரிய வாய்ப்பில்லே! 

நான் இப்ப சொல்றது, உன்னோட எதிர்காலம் தொடர்ந்து சிறப்பா இருக்கிறதுக்கு! உனக்கு பரிச்சயமில்லாத சீட்டாட்டமும், குதிரைப் பந்தயமும், துவக்கத்திலே ஒத்தையா, தனியா, வந்தாலும், சீக்கிரத்திலேயே குடிப்பழக்கத்துக்கும், பிற பெண்களிடம் ஏமாந்துபோவதற்கும் 

வழிவகுக்கும். இன்னொரு விஷயம்! பொழுதுபோக்கா ஆரம்பிக்கற சீட்டாட்டம், சீக்கிரத்திலே பணம் சம்பாதிக்கிற தொழிலா மாறிடும். எந்த வழியிலே வந்தாலும் பரவாயில்லே, பணம்தான் முக்கியம் என்கிற மனோபாவம் வந்துரும், அது பணத்துக்காக கொலை செய்யக்கூடிய அளவுக்குக் கூட ஒருவனை தூண்டிவிடும்........அதனாலேதான், பயமாயிருக்கு!"

"அப்படியா! எனக்கு நீங்க சொன்னவை தெரியாதவைதான்! உங்க பயம் நியாயமானதுதான்! என்னிடம் இப்படி விவரமா சொன்னதுபோல, வினோதிடம் பேசியிருக்கீங்களோ?"

இருவரும் தலை குனிந்தனர்.

"ஏன்? என்ன தயக்கம்?"

" வினிதா! அவனை நாங்க ஒரே குழந்தைன்னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்ததனாலே, அவனை கண்டிக்க மனசு வரலே, நாங்க இது சம்பந்தமா பேச துவங்கும்போதே, அவன் , நகர்ந்து போய்விடுவான். வினிதா! நீதான் அவனிடம் எங்க நியாயமான பயத்தை எடுத்துச்சொல்லி திருத்தணும்......"

"அதுக்கு முன்பு, நான் சில விஷயங்கள் உங்களிடம் பேசணும்........"

அவர்கள தலையாட்டி சம்மதம் தெரிவித்தனர்.

"உங்க குடும்பத்திலே, வினோதுக்கு முன்பு ஒருவருமே சீட்டாடினதில்லையா?"

"அதுவா,...வ..ந...து..."

"நான் சொல்லட்டுமா? எங்க கல்யாணத்துக்கு முதல்நாள் இரவு, விடிய விடிய நீங்களும் உங்க தம்பிகள் நாலுபேரும்வினோதையும் சேர்த்துக்கொண்டு சீட்டாடினீர்களா இல்லையா?"

"அது...வ..ந...து....."

"நான் உங்களை குற்றம் சொல்லலை, எங்க தாத்தாகூட அவங்க தம்பிகள், தம்பி பிள்ளைகளை சேர்த்துக்கிட்டு கல்யாணங்களுக்குப் போனா, விளையாடுவார்னு எங்கப்பா சொல்லியிருக்கிறார், என்ன சொல்லவரேன்னா, சீட்டாடுவதை தப்பா நம்ம குடும்பங்களிலே இப்பல்லாம் நினைக்கிறதில்லே, சரியா?"

"உம்......"

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அவள் ஒருமாதிரி! - ரவைhari k 2018-12-05 18:11
Very interesting story...happy to read ur story with positive mind...thank you and good luck :clap: :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவள் ஒருமாதிரி! - ரவைRaVai 2018-12-05 21:55
thanks a lot, Hari.K
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவள் ஒருமாதிரி! - ரவைDevi 2018-12-02 22:39
Hi.. Unga per adikkadi chillzee le parthuttu irundhen. inniku indha story padikka mudinjudhu. ella vishayatthaiyum positive ah handle pannanum endra vishyatthai azhaga sollirukkeenga. Best wishes (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவள் ஒருமாதிரி! - ரவைRaVai 2018-12-03 08:30
தேவிமேடம் அவர்களுக்கு மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top