Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவை

god

மிழகத்தின் தலைநகரம், சீர்மிகு சென்னையில், ஹோலிப் பண்டிகை கோலாகலமாக இளைஞர்களாலும் சிறுவர்களாலும், ஒருவர்மீது ஒருவர், வண்ணச்சாயம் பூசியும், பலூனில் நீர்நிரப்பி பீய்ச்சியும் கொண்டாடப்பட்ட இளங்காலை நேரத்தில், மக்கள் நிரம்பி வழியும் நெடுஞ்சாலையில், பத்துவயது சிறுவன் ஒருவனை இரண்டு ரௌடிகள் மூர்க்கத்தனமாக அடித்து நொறுக்கிக் கொண்டிருந்ததை மனித உருவில் வலம்வரும் சதைப் பிண்டங்கள் ஆயிரம் கண்டும் காணாமலும் போய்க்கொண்டிருக்கலாம், என்னால் முடியவில்லையே!

விசாரித்ததில், சிறுவன் அந்த ரௌடிகள் முகத்திலே ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்திலே, பலூன் தண்ணியை பீய்ச்சியடிச்சுட்டான், ரௌடிகளுக்கு கோபம்!

அடி தாங்காமல் சிறுவன் செத்துவிடுவான் போலிருந்தது!

கையில் கிடைத்த இரும்புக் கம்பியினால் ரௌடிகளை தலையிலேயே அடித்து விரட்டினேன்.

இருவரும் ஓடும்போது, என்னை நன்றாக முறைத்துப் பார்த்து "இரு, இரு, கொஞ்ச நேரத்தில் என்ன நடக்கப் போகிறதென்று பார்!" என்று எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

"இப்படித்தான் இந்த ரௌடிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை! உன்னைப் போல எல்லாரும் அவங்களை எதிர்த்து இன்னாத்தான், அட்டூழியம் அடங்கும்...."

"போலீஸ் என்ன பண்ணுது? கடைத்தெருவிலே கடைக்குக் கடை மாமூல் வாங்கறதுக்கே அவங்களுக்கு நேரம் போதாது....."

என்னைப் பாராட்டிய கூட்டம் ஆதவனைக் கண்ட பனிக்கட்டிபோல அடுத்த நிமிடமே கரைந்துபோனது!

ஒரே ஒரு நல்லவர் மட்டும் என் காதருகே ரகசியமாக, " தம்பி! இளங்கன்று பயமறியாது, என்பது போல நீ ரௌடிகளை அடிச்சுவிரட்டிட்டே! அவங்க, உன்னை எச்சரித்துவிட்டு போயிருக்காங்க, அவங்க எந்த நேரமும் படையா வந்துடுவாங்க! தம்பி! உன்னைப் பார்த்தா, வெளியூர்மாதிரி தெரியுது! இந்த ஊர்க்காரங்க, ஏன் எதிலும் தலையிடாம அவங்க அவங்க வேலையை பார்த்துண்டு போறாங்கன்னு சொல்றேன்! ஒருத்தரும் ஒத்துக்காட்டாலும், எல்லார்க்கும் தெரிந்த உண்மை என்ன தெரியுமா? ரௌடிகளுக்கும் போலீஸுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறதாலே, ரௌடிகள் பயமில்லாம நடமாடறாங்க! போலீஸ் ஆளும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ஊழல்லே கூட்டாளியாயிருக்கிறதாலே, பயமில்லாம இருக்காங்க! சட்டமும் கோர்ட்டும் வழக்கை விசாரிச்சு தண்டனை கொடுக்க இருபது முப்பது வருஷம் ஆகிறதாலே, அவங்களும் பயமில்லாம ஊழல் பண்றாங்க! தேர்தல்லே, மக்கள் காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப்போடறதனாலே, பணம் வைச்சிருக்கிறவன் அரசாங்கத்தை தன் கைக்குள்ளே வைச்சிருக்கான், நியாயம், தர்மம் எல்லாம் செத்துப்போயிடுத்துப்பா! சரி சரி, நீ உடனே இங்கிருந்து கண்காணாத இடத்துக்கு ஓடிப்போய்விடு!" என்று கிசுகிசுத்துவிட்டு, அவரும் கரைந்து போனார்!

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எனக்கு ஏற்கெனவே வாழ்க்கையின்மீது வெறுப்பும் விரக்தியும் ஏற்பட்டுவிட்டதால், நான் அங்கேயே நின்றுகொண்டு, எனக்குள் புலம்பினேன்!

புலம்பல் பாட்டாக வெளிவந்தது.

"உனக்கென்ன மேலே நின்றாய், ஓ!......"

"நிறுத்து! நிறுத்து!"

"நிறுத்தச் சொல்கிற நீ யார், முதலில் சொல்லு!"

"'ஓ'ன்னு யாரை நீ கூப்பிட்டாயோ, அந்த இறைவன்தான்!"

"இறைவா! உன்னை நம்பித்தானே, சொந்த ஊரைவிட்டு தன்னந்தனியாக இந்த புதிய ஊருக்கு வந்தேன், ஒன்றல்ல, ரெண்டல்ல, ஆறுமாதம் ஓடிப்போயிடுத்து! பாவம், அப்பா! மாதாமாதம், எனக்கு பணம் அனுப்ப என்னென்ன கஷ்டப்படறாரோ! பழைய வீடு ஒண்ணைத்தவிர, வேற சொத்து எதுவுமில்லே, அக்கா வேற, கல்யாணமாகாம வீட்டிலே இருக்கா, அம்மாவோ முட்டிவலியினாலே நடக்க முடியாம படுத்த படுக்கையாயிட்டா! என்னை இன்னும் என்னென்ன கொடுமைக்கெல்லாம் ஆளாக்கப்போகிறாயோ, சொல்லித் தொலையேன் இப்போதே! கொடுமைகளைவிட எந்த நேரத்தில் எது நடக்குமோ என்கிற பயமே என்னை பலி வாங்கிவிடும்போல் இருக்கு!"

இறைவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

"இதப்பாரு! என்னை வெறுப்பேத்தாதே! எனக்கு வர்ற கோபத்திலே உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, ஆமாம், சொல்லிட்டேன்..."

"எனக்குத் தெரியுமே,..."

"எப்படி?"

"நான் உனக்குள்ளே இருக்கேன், உன் மனசு என்ன நினைக்கிறதுன்னு, உனக்கு முன்னாடி, எனக்குத் தெரிந்துவிடும்....."

"அப்ப, எனக்கு வர்ற கஷ்டங்களையெல்லாம் எனக்குமுன்னே நீ அனுபவிக்கிறயா, உன்னை பார்த்தா பரிதாபமாயிருக்கு "

"அதுதான் இல்லே, தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கிறேன்....."

"உன்னை......." இறைவனை அடிக்க ஏதாவது கிடைக்குமான்னு சுற்றுமுற்றும் பார்த்தேன், ஒண்ணும் சரியா கிடைக்கலே......

இறைவன் மீண்டும் சிரித்தான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவைmadhumathi9 2019-02-16 08:06
wow really great story sir :hatsoff: arumai arunai :clap: :clap: (y) solla vaarthai illai. Namakkum kadavul ippadi thondrinaal eppadi irukkum endru thona vaikkuthu :thnkx: :thnkx: :thnkx: 4 this story. :GL: (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவைRaVai 2019-02-16 13:51
Dear Madhumathi9,
அவர் வரவேண்டியதே இல்லை, அவர் நமக்குள்ளேயும் இருக்கிறார், வெளியேயும் இருக்கிறார். ஒரு பரம ரகசியம்! அவர் மட்டும்தான் இருக்கிறார், நாமெல்லாம் நிழல்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவைRaVai 2019-02-16 07:04
Dearest Adharva Jo!
I am touched by your genuine appreciation, your own song dedicated to, and the elaborate comments!
Honestly, I am happier with whatever you write than even when I wrote the story!
This thatha blesses you and your family and invokes God's blessings too!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவைAdharvJo 2019-02-15 20:54
:hatsoff: uncle, dhool kalakitinga :clap: :clap: with mild humor and very realistic depiction . I truly believe in this uncle. Sometimes sodhapalam illai neriya vaati kuda we might have to face defeats but we got to hear our mind and heart say. Kandipa our struggles will be paid. As said before god resides in our strength.
Thank you for such a beautiful story.
I am not liberal you're modest :cool:
Ok lastly I would dedicate this song to the story. Nenjam undu nermai undu odu raja...neram varum kathirndhu paru raja, anji anji vazhndhahu podhum raja!!
Keep rocking
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவைRaVai 2019-02-16 07:05
For my thanks, see down below
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவைDeepthi94 2019-02-15 16:31
:hatsoff: .. wow.. well narrated .. evlo simple ah Solirukanga
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவைRaVai 2019-02-15 16:36
Dear Deepthi94
Thanks. Continue to support me!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவைkarna 2019-02-15 15:38
அருமை ஐயா.எவ்வளவு பெரிய விஷயம் இவ்வளவு எளிமையா சொல்லிட்டீங்க :hatsoff: நன்றி நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....! - ரவைRaVai 2019-02-15 16:38
Thanks, Karna!
விஷயத்தை பெரிசாக்கிறதும், சின்னதாக்கிறதும், நம்ம கையிலேதான் இருக்கு!
நீங்க இப்பவே ஒரு கதை எழுத ஆரம்பிங்க, எத்தனை சுலபம்னு புரியும்!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

YNEA
13
VD

KNP

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

IOKK
16
Siva

NKU

Tha
17


VTKS

UNMT

Mor

AN

Eve
18
EVUTNiNi
19
MMSV

ILU

YNEA
20
GM

KNP

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24


VTKS

UNMT

* Change in schedule / New series
* On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top