(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - இதுவும் கடந்து போகும்!! - ரவை

thisToo

"றைவா! பிறந்ததிலிருந்து, எத்தனையோ சோதனைகளை கடந்துவந்துவிட்டேன். ஆனால், இப்போது வந்திருக்கும் சோதனையை நிச்சயமாக என்னால் கடக்கமுடியாது. மனமிருந்தால், நீ இறங்கி வந்து, என்மீது இரக்கம் காட்டி, என்னை காப்பாற்று! இல்லையெனில், நான் மூழ்கிவிடுவேன், கடலாழ கஷ்டத்தில்!"

 காஞ்சனா பிரார்த்தனையில் கொஞ்சங்கூட அதிகப்படியில்லை, யதார்த்தமான நிலை அதுதான். அவளால் நிச்சயம் இந்த சோதனையை கடக்கமுடியாது.

 அவள் மட்டுமல்ல, உங்களாலும் என்னாலும்கூட கடக்கமுடியாது.! ஏற்கெனவே பஞ்சத்தில் அடிபட்டு எலும்பும்தோலுமாக உள்ள நிலையில், அவள் தலையில் ஐம்பது கிலோ சுமையை ஏற்றினால், எப்படி தாங்குவாள்? நசுங்கித்தான் போவாள்.

 இப்போது வந்திருக்கிற சோதனை, அவள் தலையில் ஐம்பது கிலோ சுமையை ஏற்றியுள்ளது போலத்தான்!

 நீங்களே சொல்லுங்கள்! அவளோ விதவை! சாதாரணமான விதவையல்ல; குடும்பத்தை எதிர்த்து நின்று கலப்புத் திருமணம் செய்துகொண்டபின், ஒரு பெண் குழந்தையின் தாயானபின், விதவையானவள்! உற்றமும் சுற்றமும் ஒதுக்கிவைத்துவிட்ட விதவை! 

 ஊரிலே உள்ள பெரிய மனிதர்களும் எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் வாய்கிழிய கலப்பத் திருமணத்தை ஆதரித்துப் பேசினாலும், எழுதினாலும், கவி பாடினாலும், நடைமுறையில், அவளுக்கு உதவியாக ஒரு துரும்பைக்கூட தூக்கிப் போடாதவர்கள்!

 அவளைக் காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டவனைக் கத்தியெடுத்து கழுத்தறுத்துக் கொன்றவர்கள், அவனுக்குப்பதில், அவளைக் கொன்றிருக்கலாம். இல்லையேல், இருவரையுமே கொன்றிருக்கலாம்!

 அவள் கணவனை பட்டப்பகலில், நடுவீதியில், கொன்ற பயங்கர குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, மக்களாட்சியின் சுளிவுநெளிவுகளை சாதகமாக்கி இன்றும் சமூகத்தில் பெரிய மனிதர்களாக வலம் வருகிறார்கள்.

 குற்றமே செய்யாதவளோ, ஒரு வயது பெண் குழந்தையுடன் தன்னந்தனியாக வாழ்க்கையில் முட்டி மோதி விழுந்து எழுந்து உடம்பெல்லாம் விழுப்புண்களுடன், வயதுவந்த பெண்ணை கௌரவமாக படிக்கவைத்து, தகுந்த முறையில் திருமணம் செய்வித்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்வை அமைத்துத் தர, முக்கு முனகி நாட்களை தள்ளிக்கொண்டிருக்கையில், இப்படியொரு பயங்கர சோதனையா?

 பத்தாம் வகுப்பு படிக்கும் மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டு வேலைகளைஅப்படியே போட்டுவிட்டு, அலுவலகத்துக்கு ஓடினாள்.

 அவளுக்கு திருமணமானதிலிருந்து சோறு போடும் உத்தியோகம்! அவள் படித்த எம்.ஏ. பட்டம் அவளுக்குப் பெற்றுத் தந்த ஆசிரியை உத்தியோகம்!

 அந்த உத்தியோகமும் அதனால் கிடைத்த வருமானமும்தான் அவளை பல இன்னல்களிலிருந்து இன்றுவரை காப்பாற்றிவருகிறது. ஒன்றா, இரண்டா? சொல்லி மாளாது!

 அன்று காலை தொலைக்காட்சியில், ராசிபலன் நிகழ்ச்சியில் அவள் ராசிக்கார்ர்களுக்கு அன்று மிகுந்த சோதனை நாள் என்று ஜோதிடர் நங்கநல்லூர் வெங்கட்ராமன் கூறியதிலிருந்து, அவளுக்கு மனமே சரியில்லை!

 மகளுக்கு, அவள் பள்ளிக்கு செல்லுமுன், அவளிடம் தன் மனநிலையை கொஞ்சம் வெளிப்படுத்தினாள்.

 " பூமா! உனக்கு விவரம் தெரிகிற வயசு வந்தாச்சு! நீ பெரியவளாகி இரண்டு வருஷம் ஓடிப்போயிடுத்து! இந்த உலகத்திலே நல்லவங்களும் உண்டு, கெட்டவங்களும் உண்டு! பார்த்து நடந்துக்க! பெண் உடம்பு கண்ணாடி பாத்திரம், கைதவறி கீழே விழுந்தால், உடைந்து தூள்தூளாயிடும். ஞாபகம் வைச்சுக்கம்மா!"

 " என்னம்மா! உபதேசம் புதுசாயிருக்கு?"

 " ஜோசியர் சொன்னாரு, இன்னிக்கு நமக்கு சோதனையான நாளாம்!"

 " அம்மா! உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ? தொலைக்காட்சியிலே ராசிபலன் சொல்றவங்க, எல்லா ராசிக்கும் தினமும் பலன் சொல்லியாகணும். என்ன செய்வாங்க தெரியுமா? பொதுவா, நாலைந்து விதமா பலன் எழுதி வைத்துக்கொண்டு, அதையே வாரம் முழுவதும் மாற்றி மாற்றி பலன் சொல்லுவாங்க. சாதனை, சோதனை, வேதனை, யோகமான காலம், அதிர்ஷ்டநாள்னு சில சொற்களை சீட்டு குலுக்கிப்போட்டு, ராசியை மாற்றி சொல்லுவாங்க. இன்னிக்கி, உன் ராசிக்கு சோதனை விழுந்திருக்கும், சீட்டிலே! அதைப்போய் பெரிசா எடுத்துக்கிட்டு....அம்மா! பயப்படாதேம்மா! நாம சந்திக்காத சோதனையா? அனுபவிக்காத வேதனையா? அத்தனையும் பனியா கடந்து போனாப்பலஇதுவும் கடந்துபோகும்!"

 வயதில் சிறியவளாயிருந்தாலும், பூமாவின் விவேகம் காஞ்சனாவுக்கு ஆறுதலை தந்தது!

 அலுவலகத்துக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தவளை, பின்னாலிருந்து "காஞ்சனா" என ஒரு குரல் அழைத்தது!

 திரும்பிப் பார்த்தாள்! போலீஸ் அதிகாரி!

 இவருக்கு எப்படி என் பெயர் தெரியும்? என காஞ்சனா யோசிக்கையில், அந்த அதிகாரி தன் தலையிலிருந்த தொப்பியை அகற்றினார்.

 " அடப்பாவி, நீயா?" என காஞ்சனா அலறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.