(Reading time: 10 - 20 minutes)
Cricket

சிறுகதை - அவள் எங்கே போவாள்? - ரவை

பிச்சம்மா, வேலையை முடித்துக்கொண்டு, வீட்டுக்கு கிளம்பும்போது, தயங்கித் தயங்கி நின்றாள்.

 நிர்மலாவுக்கு புரிந்துவிட்டது, பிச்சம்மாவுக்கு அவசரமாக ஏதோ தேவைப்படுகிறது, கேட்கத் தயங்குகிறாள் என்று தெரிந்து,

 " என்ன வேணும், பிச்சம்மா?"

 " என் மவ பெரியவளாயிட்டா இல்லே, புறா வேணுங்கறா.........."

 " புறாவா? ஆமாம், புறாவுக்கும் அவ பெரியவளானதுக்கும் என்ன சம்பந்தம்? நானோ சுத்த சைவம், புறா, கோழி, மீனைப்பற்றியெல்லாம் எனக்கென்ன தெரியும்?"

 " ஐயோ, அம்மா! அந்தப் புறா இல்லேம்மா! பொம்பளைங்க மார்பிலே போட்டுக்கறாங்களாமே, அது! என் மவ பள்ளிக்கூடத்திலே கூட படிக்கிறவங்க எல்லாரும் புறா போட்டுண்டு அழகா எடுப்பா தெரியறாங்களாம், தனக்கும் வேணுங்கறா, என் மவ! நான் எங்கேம்மா போவேன், புறாவுக்கு?"

 " பிச்சம்மா! அதுக்குப் பேரு, புறா இல்லே, ப்ரா! எங்கே சொல்லு, ப்ரா! ஆமாம், அதெல்லாம் விலை அதிகமாச்சே! முந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை விலை, தெரியுமோ? அது மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கு ஒரு சைஸ் இருக்கு, 32, 34, லிருந்து 45 கூட இருக்கு, உம் மவ சைஸ் என்ன? சைஸ்னா அளவு!"

 " அந்த கண்ராவியெல்லாம் எனக்கு தெரியாதேம்மா! உங்க பழைய புறா ஏதாவது இருந்தா, கொடுப்பீங்களோன்னு நினைச்சேன்..."

 நிர்மலா சிரித்தாள். 

 " பிச்சம்மா! அதெல்லாம் உன் மவளுக்கு சரிவராது! வாங்கித்தர உனக்கு கட்டுபடி ஆவாது! தவிர, அதெல்லாம் அவசியமும் இல்லே! உன் மவளை புறாவை மறந்துடச் சொல்லு! போ!"

 தனக்குத் தானே ஏதோ பேசிக்கொண்டு பிச்சம்மா நகர்ந்தாள்.

 " பிச்சம்மா! ஒரு நிமிஷம்! நான் கடுமையா பேசறதா வருந்தாதே! ஏன் சொல்றேன்னா, மவ ஆசைப்படறாளேன்னு கடனை உடனை வாங்கி அவளுக்கு ப்ரா வாங்கித் தந்தேனா, அவ அத்தோடு நிற்கமாட்டா! அவ கூடப் படிக்கிறவங்க போட்டுக்கிற விலை உயர்ந்த பேண்ட், ஹைஹீல் ஷூ, பாடி ஸ்பிரே, சைக்கிள், ஸ்கூட்டர், கார்னு ஒவ்வொரு நாளும் உன்னைக் கேட்டு நச்சரிப்பா! பாவம்! நீ எப்படி தினமும் நாலு வீட்லே வேலை செய்து கஷ்டப்பட்டு சாப்பாட்டுக்கே போதும் போதாம சம்பாதிக்கிறே! உன் குடிகாரப் புருஷன், தான் சம்பாதிக்கிறதையெல்லாம் குடிச்சிட்டு, நீ செலவுக்கு வைச்சிருக்கிற ரெண்டு காசையும் பிடுங்கிண்டு பூடறான், இந்த நிலையிலே, உன் மவ கேட்கறதை உன்னால எப்படி வாங்கித்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.