(Reading time: 10 - 20 minutes)
Cricket

தரமுடியும்? அதனால, இப்பவே, உன் மவளுக்கு நீ படற கஷ்டத்தை சொல்லி வளர்த்து அவளுக்கும் பொறுப்பு வராப்பலே திருத்து! முக்கியமா, அவளை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறதை நிறுத்தச் சொல்லு! மற்ற பெண்களுடைய அப்பாக்கள் பணக்காரங்க, சொத்து பணம் கார் வசதி படைச்சவங்க! இவளோட அப்பன் ஒரு பைசாக்கு பயனில்லாதவன்! அம்மா நாலுவீடு பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, துணி துவைத்து, கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது சோற்றுக்கே போதலை............"

 " நீங்க சொல்றது, புரியுதும்மா! ஆனா, என் ஒரே குழந்தை அவ! அவ அழுதா, மனசுக்கு கஷ்டமாயிருக்கு! கையிலேயோ, காசில்லே! அவ அழாம இருக்க, நான் தினமும் அழறேன்.........."

 பிச்சம்மா போய்விட்டாள்!

நிர்மலா, ஆபீஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்த தன் கணவனின் தேவைகளை செய்துகொடுக்க, உள்ளே வந்தாள்.

 " பிரமாதமா பிச்சம்மாவுக்கு லெக்சர் அடிச்சியே! ரொம்ப அழகா சொன்னே, வெரி குட்! நிர்மலா! அதையே உன் மகனுக்கு எப்ப சொல்லப்போறே?"

 " அவனுக்கு எதுக்குஅவன் நல்லா படிக்கிறான், நல்லா விளையாடி பரிசு வாங்கறான்,............."

 " அத்தனை அருமையான பிள்ளைதான், கிரிக்கெட் உலக கோப்பை மேட்ச் பார்க்கஅவன் நண்பர்களுடன் இங்கிலாந்து போய் ஒரு வாரம் தங்கிட்டு வரணுங்கறான், நாம என்ன டாடா, பிர்லாவா? நான் ஒரு அரசாங்க அதிகாரி, ஆயிரக்கணக்கிலே சம்பளம் வாங்கறவன், லட்சக்கணக்கிலே இல்லே, என் வருமானம் ஏதோ நம்ம குடும்பச் செலவுக்கு போதுமானதாயிருக்கு........

 குறைந்தது ரெண்டு லட்ச ரூபாய் இருந்தால்தான், அவனை இங்கிலாந்து அனுப்பமுடியும்..நான் எங்கே போவேன், ரெண்டு லட்சத்துக்கு?"

 " ஏங்க, நீங்க பேசறது நியாயமா இருக்கா? நம்ம பிள்ளை கிரிக்கெட்டிலே ஸ்டேட் டீமோட கேப்டன்! பேப்பரிலே அவன் பெயர் கொட்டையெழுத்திலே படிக்கிறபோது சந்தோஷமாயிருக்கில்லே, பாருங்க! வர வருஷம் ஐ.பி.எல். போட்டிக்கு அவன் செலக்ட் ஆகி, மூணு கோடி ரூபா சம்பாதிச்சு உங்க ரெண்டு லட்ச ரூபாயை வட்டியோட திருப்பிக் கொடுத்துடுவாங்க............"

 " இப்பத்தான் எனக்கு புரியறதுஅவன் ஏற்கெனவே உன்னை மூளைச்சலவை செய்து தயார்படுத்திட்டாங்கறது, அம்மா, தாயே! எனக்கு அவன் சம்பாதிக்கப்போகிற மூணு கோடியும் வேண்டாம், இப்ப வட்டிக்கு ரெண்டு லட்சம் கடன் வாங்கவும் வேண்டாம்! உன் பிள்ளைக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.