" நிர்மலா! உனக்கும் நம் மகனுக்கும் நான் இங்கிலாந்து பயணத்துக்கு பணம் தரமுடியாமல் இருப்பது வருத்தமாயிருக்கா? நான் என் அபிப்பிராயத்தை சொன்னேன். ஆனால், அந்த அபிப்பிராயத்துக்கு மாறுதலாக, நீங்கள் இருவரும் ஏதாவது பேச நினைத்தால், தாராளமாகப் பேசலாம். நான் திறந்த மனதோடுதான் இருக்கிறேன். குடும்பத்தில் இருக்கும் மூவரும் கலந்து பேசி எந்த விஷயத்திலும் ஒற்றுமையாக முடிவு எடுப்பதுதான் நல்லது..........."
" நானும் இதைப்பற்றி ஆழமா யோசித்தேன். நம் கையில் பணம் இருக்கிறதா, கடன் வாங்கவேண்டுமா என்பது இரண்டாம் பட்சம்! முதலாவதாக சிந்திக்கவேண்டியது, அந்தச் செலவு செய்வது, அவசியந்தானான்னு முடிவு எடுக்கணும். எனக்கென்னவோ, நம் பிள்ளை மேட்ச் பார்க்க இங்கிலாந்து செல்வது ஆடம்பரச் செலவு, அவசியமில்லாத ஒன்றுன்னு புரிந்துவிட்டது, அதை அவனிடமும் சொல்லிவிட்டேன். அவனும் உங்கள் முடிவுக்கு விட்டுவிட்டான், அதனாலே இதைப்பற்றி பேச,எதுவுமில்லை, வாங்க, சாப்பிடலாம்!