(Reading time: 10 - 20 minutes)
Cricket

பிடிவாதம் பிடிக்காதேன்னு புத்திமதி சொல்லு!"

 நிர்மலாவுக்கு தன் கணவனின் பிடிவாதம் பிடிக்கவில்லை. ஊரிலே உள்ள எல்லா பிள்ளைங்களும் கிரிக்கெட் ஆடமுடியுமா? ஆடினாலும், தன் பிள்ளையைப்போல, திறமையாக ஆடமுடியுமா? ஆடினாலும் ஸ்டேட் டீமின் கேப்டனாக முடியுமா? அவனோடு விளையாடற பத்துபேரும் போகிறபோது, தன் பிள்ளையும் போகணும்னு ஆசைப்படறதுலே என்ன தவறு?

 தன் கணவனிடம் தற்சமயம் ரொக்கமாக அவ்வளவு பணமில்லை, உண்மைதான்! அதற்காக, வேறு வழிகளில் பணம் தேடக்கூடாதா? பிள்ளைக்குப் பதிலாக, பெண்ணாகப் பிறந்திருந்தால், இந்த வயதுக்கு, கையில் ரொக்கமில்லை என்ற காரணத்துக்காக அவளுக்கு திருமணம் செய்துவைக்காமல் தள்ளிப்போடுவாரா? கடன் வாங்கியாவது திருமணம் செய்துவைக்க மாட்டாரா? அதுவும், அதற்கு பல ரெண்டு லட்சங்கள் தேவைப்படாதா? பாவம், இந்தப் பிள்ளை ஒரே ஒரு ரெண்டு லட்சம்தான் கேட்கிறான்.

 இந்த வருஷமே தன் பிள்ளைக்கு ஐ.பி.எல்.லில் செலக்ட் ஆகியிருக்கவேண்டும், ஆகியிருந்தால் குறைந்தபட்சம் ஒரு கோடி சம்பாதித்திருப்பானே!

 வரட்டும், ஆபீஸிலிருந்து திரும்பி வரட்டும் மாலையில், தன் கணவனிடம் பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்கிறேன், என் நகைகளை அடகுவைத்து பணம் புரட்டச் சொல்கிறேன்!

 நிர்மலா மனதில் போராடிக்கொண்டிருக்கையில், காலிங் பெல் அடித்தது!

 கதவைத் திறந்தாள், பிச்சம்மா!

நிர்மலா அவளை எதிர்பார்க்கவேயில்லை!

 " என்ன பிச்சம்மா, எங்க வந்தே?"

 " அம்மா! நீங்க சொன்னதையெல்லாம் என் மவகிட்ட சொன்னேன், அவ பதிலுக்கு என்னென்னவோ பேசறாம்மா......."

 " சொல்லு! என்ன சொல்றா?"

 " அவ சொல்றா, தான் படிக்கிறதுக்கு நான் ஒரு பைசாகூட செலவு செய்யலையாம், அரசாங்கசெலவிலே படிக்கிறாளாம், நான் சமைக்கிற கஞ்சியோ கூழோ சாப்பிட்டு நல்லா படிச்சு வகுப்பிலே முதல் மார்க் வாங்கறாளாம், அவளுடைய மார்க்குக்கு, கல்லூரி படிப்பும் அரசாங்க ஸ்காலர்ஷிப்பிலே இனாமா படித்து, பட்டம் பெற்று நல்ல உத்தியோகத்துக்குப்போய் கைநிறைய சம்பளம் வாங்கி என்னை ராணிமாதிரி வைச்சு காப்பாற்றுவாளாம், நான் கால்மேல கால் போட்டுண்டு வீட்டிலே உட்கார்ந்துண்டு, ஜாலியா இருக்கலாமாம்........."

 " அடிப்பாவி! இவ்வளவு பேசறாளா உன் மவ?"

 " இது மட்டுமில்லேம்மா! தான் நகை, பகட்டு ஆடை, சைக்கிள், ஸ்கூட்டர், சினிமா, பீச்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.