(Reading time: 10 - 20 minutes)
Cricket

ஓட்டல் செலவுக்கு கேட்கலையாம், பள்ளிக்கூடம் போகிற வழியிலே, ஆம்பளைப் பசங்க, இவ மார்பை பார்த்து ஜொள்ளு விட்டு பின்னாடியே வந்து கலாட்டா பண்றாங்களாம், அந்த தொந்தரவுக்காகத் தான் அவ அந்த புறா கேட்கறாளாம், வாங்கித்தரலேன்னா பள்ளிக்கூடம் போகமாட்டாளாம், அழறாம்மா! எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலேம்மா!"

 ஏறக்குறைய தான், தன் மகன் விஷயத்தில், அவனுக்கு ஆதரவாக சிந்திக்கிறதுபோலவே, பிச்சம்மாவின் மவ பேசறாளே, அதை எப்படி தப்புனு சொல்வது என்று நிர்மலா யோசித்தாள்.

 " அம்மா! என் மவ ரொம்ப நியாயமா பேசறாம்மா, ஒரே ஒரு புறா வாங்கிக்கொடுத்தால் போதும், அதையே தினமும் துவைத்து போட்டுக்கிறேன்னு கெஞ்சறாம்மா! எனக்கு மனசு சங்கடப்படுதும்மா! அவ ஒருநாள் கூட கஞ்சி கூழை சாப்பிட முகம் சுளித்ததில்லே, புதுத்துணி கேட்டதில்லே, காசே எதுக்காகவும் கேட்டதில்லே, அவ கேட்கிற இந்த ஒரு பொருளை எப்படியாவது அவளுக்கு வாங்கித்தரணும்னு தோணுதும்மா! அம்மா! நீங்கதாம்மா, கடனா கொடுத்து உதவி செய்யணும், மாசம் கொஞ்சமா என் சம்பளத்திலே பிடிச்சுக்குங்கம்மா! .........."

 பேசிக்கொண்டே, பிச்சம்மா, நிர்மலாவின் காலில் விழுந்தாள்!

 ஒரு பெண்ணின் பாதுகாப்பே இதில் சம்பந்தப்பட்டிருக்கிறதை உணர்ந்த நிர்மலா, முடிவெடுத்தாள்.

 "பிச்சம்மா! உனக்கோ உன் மவளுக்கோ, ப்ரா வாங்கி பழக்கமில்லை. அதனாலேஅவளை இங்கு அழைத்துவா! நானே அவளை கடைக்கு அழைத்துப்போய் அவளுக்கு பொருத்தமான ப்ரா வாங்கித் தருகிறேன். அது அவளுக்கு என் பரிசாக இருக்கட்டும், நீ பணத்தை திருப்பித் தரவேண்டாம்......."

 பிச்சம்மா, மறுபடியும் நிர்மலாவின் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு ஓடினாள், மவளை அழைத்துவர!

 மாலையில் தன் கணவன் வந்ததும் அவனிடம் நடந்ததைக் கூறினாள்.

 " நிர்மலா! நீ செய்த காரியத்தை நான் மனமாரப் பாராட்டுகிறேன், ஒரு கன்னிப் பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற உடனடியாக முடிவெடுத்து செயற்பட்டிருக்கிறாய். வெரி குட்!"

 " ரொம்ப சந்தோஷங்க!"

 " நிர்மலா! இதே போல, நம் பிள்ளை ஆசைப்படுவது, தவிர்க்கமுடியாத ஒன்றா, அத்தியாவசியமானதா என்று நீயும் யோசி! நம் பிள்ளையையும் யோசிக்கச் சொல்!"

 நிர்மலா பதில் கூறாமல் நகர்ந்தாள்.

 " அம்மா! அப்பாவிடம் பேசினாயா, அவர் நான் இங்கிலாந்து போக பணம் தரேன்னு ஒத்துக்கிட்டாரா? சொல்லும்மா!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.