(Reading time: 10 - 20 minutes)
Cricket

 " குமார்! இப்படி உட்கார்! நீ எதற்காக இங்கிலாந்து போய் நேரடியா மேட்ச் பார்க்கணும்னு சொல்றே? இந்தப் போட்டியோ, ஒண்ணரை மாதம் நடக்குது, நீயோ ஒரு வாரம்தான் அங்கே இருக்கப்போறே, மற்ற மேட்சையெல்லாம் இங்கேயிருந்தே டி.வி.யிலே பார்க்கிறதுபோல, அந்த ஒரு வாரமும் பார்த்தாலென்ன?"

 " அம்மா! நண்பர்களோட நேரிலே மேட்ச் பார்த்தா, அதிலே ஒரு த்ரில் இருக்கும்மா! ஜாலியா இருக்கும்மா, ப்ளீஸ்ம்மா!"

 "நான் சில விவரங்களை உன்னிடம் தெரிஞ்சிகிட்டு, அப்பாவிடம் பேசுகிறேன். நீ பெரிய கிரிக்கெட் ப்ளேயர் என்பதால், இந்த வீட்டிலே அப்பாவும் நானும் அந்த விளையாட்டு சம்பந்தப்பட்ட செய்திகளை படிக்கிறோம், டி.வி.யிலே பார்க்கிறோம், எனக்கென்னவோ லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியிலே ஸ்டேடியத்திலே உட்கார்ந்து மேட்சை பார்க்கிறதைவிட, டி.வி.யிலே பார்க்கிறதுதான் நல்லதுன்னு தோணுது! ஏன்னா, டி.வி.யிலேதான் ரீப்ளே எல்லாம் காட்டறான், ஒரு நிகழ்வையே திருப்பித் திருப்பி காட்டறான், முன்னர் நடந்த மேட்சிலே என்னாச்சு என்கிற விவரமெல்லாம் சொல்றான், நேரடியா மேட்ச் பார்த்தால், இதெல்லாம் கிடைக்காது!

தவிர, மழையினாலே, நீ பார்க்க ஆசைப்படற மேட்ச்கூட நடக்குமோ, நடக்காதோ, அது 

மட்டுமில்லே, ஜாலியா இருக்கிறதுக்காகவும், த்ரில்லுக்காகவும் ரெண்டு லட்ச ரூபாய் செலவு செய்வது, விவேகமா? அந்தப் பணத்திலே, உனக்கே வேற பொருள் ஏதாவது நிரந்தர உபயோகத்துக்கு செலவு செய்வது, நல்லதில்லையா?

இன்னொரு விஷயம், நம்மிடம் நிறைய பணம் இருந்து, கடன் வாங்காம, செலவு செய்வதாக இருந்தால் கொஞ்சம் யோசிக்கலாம், ஆனா நம்மிடம் பணமில்லாம, வட்டிக்கு கடன், பொருளை அடமானம் வைத்து வாங்கணும். குமார்! நீ விவரம் தெரிந்தவன்! அடுத்த வருஷமே படிப்பை முடித்துக்கொண்டு, உன் வாழ்க்கையை தொடங்கப்போறவன்! வாழ்க்கையிலே பணம் சம்பாதிக்கிறதிலே கஷ்டநஷ்டம் அப்ப புரிஞ்சிக்குவே! ............"

 " அம்மா! உன்னைவிட அப்பாவே பெடர்! 'நோ'ன்னு ஒரு வார்த்தையிலே சொல்லிடுவார், நீயோ ஒரு லெக்சரே அடிக்கிறே! ஓ.கே. ஓ.கே. நீ அப்பாவிடம் இதைப்பற்றி சிபாரிசு செய்யவேண்டாம். அவர் முடிவுக்கே விட்டுடுவோம். சரியா?"

 நிர்மலா மகனுக்கு முத்தம் கொடுத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள்.

 நிர்மலா, தன் கணவனிடம், தான் மகனிடம் பேசியதுபற்றி தெரிவிப்பதா, வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தபோது, அவனே பேசினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.