(Reading time: 6 - 11 minutes)
Puncture

 இவைதவிர, இருசக்கர வாகனங்கள்! 25 லட்ச ரூபாய் விலையுள்ள ஜெட்வேக மோட்டார்பைக், (இவை கார்களைவிட வேகமாகச் செல்லும்), ஸ்கூட்டர், சைக்கிள், தள்ளுவண்டி, மாட்டுவண்டி இத்யாதி!

 சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களில் பெரும்பாலோர், தங்கள் தனிவாழ்வில் எப்படியோ, கார் ஓட்டும்போது மட்டும் எங்கிருந்தோ போட்டி மனப்பான்மை அவர்களுக்கு வந்துவிடும். தனக்கு முன்பு செல்கிற காரை முந்தவேண்டும் என்பதற்காக விதிகளைமீறி இடது புறத்தில் முந்துவார்கள், ஏனெனில் வலதுபுறத்தில் போதிய இடம் இருக்காது. 

 அப்படி இடதுபுறம் செல்வதற்கும் பின்னால் வேகமாக வருகிற வாகனங்களுக்கு சைகை தராமல் காரை திருப்புவார்கள். அப்படி செய்யும்போது, ஒன்றன்பின் ஒன்றாக பல வாகனங்கள் திடுமென பிரேக் போட்டு நிறுத்தும்போது, விபத்துகள் நடைபெறுகின்றன.

 பெரிய கார், சிறிய காரை வேகமாக ஓட்டி முந்திச் சென்றாலும், டோல்கேட்டில் நிற்கும்படி ஆகிவிடும். அங்கு சின்னகாரை ஓட்டுபவர், அவரை சந்தித்து சைகையால் கேலி செய்வார்!

 இன்னுமொரு அதிசயம் என்னவெனில், சில ஸ்கூட்டர்கள் முன்னால் ஒரு குழந்தை, பின்னால் மனைவி, இன்னொரு குழந்தையுடன் பயணம் செய்வார்கள், எதுவரையில்? சென்னையிலிருந்து பெங்களூர்வரையில்!

 சொல்லவந்த விஷயத்தை மறந்து, எங்கெங்கோ போய்விட்டேன், சாரிஆணியின் விலை 150 ரூபாயைப் பற்றி!

 வேலூர் தாண்டியதுமே, எனக்கு கடந்தமுறை நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.

 ஆம்பூர், வந்தவாசி கடந்து கிருஷ்ணகிரியை அடைய இருபது கிலோமீட்டர் இருக்கும்போது, காரில் ஒரு சத்தம் வந்தது. உடனே காரை நிறுத்தி, நான்கு சக்கரங்களை செக் செய்தால், ஒரு சக்கரம் பங்க்சர்! 

 சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதிர்ஷ்டவசமாக, ஒரு கடைவாசலில் பெரிய டயர்கள் தொங்கியது, கண்களில் பட்டது. ஆம், அது ஒரு டயர் பங்க்சர் சரிசெய்யும் கடை!

 கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, பங்க்சரான டயரை எடுத்துவிட்டு பதிலுக்கு ஸ்டெப்னி மாட்டி, அதற்கு கூலியாக 150 ரூபாய் தந்தது ஞாபகம் வந்தது.

 அதை என் மகனிடம் பகிர்ந்துகொண்டு சிரித்துக்கொண்டிருக்கையில், "அப்பா! கொஞ்சம் இரு, ஏதோ சத்தம் வருவதுபோல் கேட்குது........."

 ஆம், வலது புற பின் சக்கரம் பங்க்சர். சுற்றுமுற்றும் பார்த்தால், அதே டயர் பங்க்சர் கடை! 

 சென்றமுறை போல, இம்முறையும் டயரில் ஒரு ஆணி குத்தி பங்க்சர்! 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.