(Reading time: 6 - 11 minutes)
Puncture

 அதே போல, அதை கழற்றி, ஸ்டெப்னியை மாட்டி, 150 ரூபாயை தந்துவிட்டு, பக்கத்திலிருந்த கடையில் டீ குடித்துக்கொண்டே, என் மகனிடம் கேட்டேன்.

 " ஒரு டயரை மாற்ற 150 ரூபாயா? ரொம்ப கொள்ளையாயிருக்கே!"

 " அப்பா! 150 ரூபாய் டயர் மாற்றினதுக்கில்லே, இந்த அத்வானத்தில், யாருமே இல்லாத இடத்தில், ஒரு ஆள் கிடைச்சதுக்குத்தான் அந்தப் பணம்!"

 எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த கடைக்காரன் எங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தான்.

 " ஏம்ப்பா சிரிக்கிறே?"

 " பணக்காரங்க சோம்பேறித் தனத்தை நம்பித்தானே, பல ஏழைகள் வாழறாங்க, இப்ப பாருங்க, நீங்க ரெண்டு ஆம்பளைங்க இருந்தும், டயரை நீங்களே மாற்றியிருக்கலாமே, செய்யமாட்டீங்கன்னு தெரிஞ்சுதான், அவன் சாலையிலே ஆணியை செங்குத்தா நட்டு, வரபோற கார்களின் டயரை பங்க்ச்சராக்கிட்டு அவனே டயரை மாற்றிட்டு பணத்தை பிடுங்கிக்கிறான், அவன் 150 இல்லே, 500 கேட்டிருந்தாலும், முணுமுணுத்துக்கிட்டே கொடுப்பீங்களேதவிர, உடம்பு வணங்கி நீங்க மாற்றமாட்டீங்க! அதனாலேதான் பல வருஷமா இந்த பொட்டைக்காட்டிலே அவன் சந்தோஷமா கடைபோட்டு நிறைய சம்பாதிக்கிறான், இதைப் பார்த்துக்கிட்டேயிருக்கிற எனக்கும் இதிலே ஒரு லாபம்!"

 " உனக்குமா?"

 " ஆமாம், உங்களைப்போல காரிலே சவாரி செய்கிற பணக்காரங்க, இந்த கடையிலே சாதாரணமா காரை நிறுத்தி டீ குடிப்பீங்களா? மாட்டீங்க! ஆனந்தபவன், சரவணபவன் ஓட்டலிலே இதே அஞ்சு ரூபா டீக்கு ஐம்பது ரூபா கொடுத்து சாப்பிடுவீங்க, ............"

 தலை குனிந்துகொண்டு கிளம்பினோம்.

 " சார்! இப்படி சில பணக்காரங்க இருக்கிறதனாலேதான், பல ஏழை குடும்பங்கள் இன்னிக்கி கஞ்சியோ கூழோ குடிக்குது, புண்ணியம் சேருது உங்களுக்கு! தொடர்ந்து இப்படியே இருங்க, மாறிடாதீங்க, சார்!" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.