(Reading time: 12 - 23 minutes)
Couple

 'அண்ணா' குதூகலமாக வெளியேறியதும், தாயும் மகளும் வீட்டைப் பூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று நடந்ததை விவரமாகச் சொல்லி புகார் கொடுத்தனர்.

 மறுநாள், தாயையும் மகளையும் அழைத்துச் செல்லவந்த 'அண்ணா'வை, காவல்துறை அதிகாரிகள் பந்தோபஸ்துடன் அழைத்துச் சென்றனர்.

 மறுநாள், எல்லா ஊடகங்களிலும், வந்த பேனர் செய்தி:

 'இந்த உறுப்புதான விவகாரத்திலே, தேசிய அளவிலே ஒரு பெரிய கும்பலே ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக, டில்லியில் அதிகமாக நடக்கிறது. இந்தக் கும்பலிலே, காவல்துறை அதிகாரிகள், டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், புரோக்கர்கள்,உறுப்புதானம் செய்பவர்கள் உள்ளனர்.

 ஏனெனில், தேவை லட்சக்கணக்கில் உள்ளபோது, தானம் செய்பவர்கள் மிக மிக்குறைவாக உள்ளனர்.

 உயிருக்கு மன்றாடும் நோயாளிகள் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய தயாராயுள்ளனர்.

 இந்த விவகாரத்தில்ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல் பணம் கை மாறுகிறது.

 இதில் வேதனைக்குரிய விஷயம், தங்கள் ஏழ்மையின் காரணமாக உறுப்புதானம் செய்தால், அவர்களுக்குச் சேரவேண்டிய பணத்தை புரோக்கர்கள் தராமல் வஞ்சிக்கிறார்கள்.

 ஒவ்வொரு கிட்னி தானத்துக்கும், நோயாளியிடமிருந்து எழுபது லட்சத்திலிருந்து ஒரு கோடி வரையில் பறிக்கிற இந்தக் கும்பல், தானம் செய்கிற ஏழைக்கு தருவது வெறும் மூன்று லட்சமே!

 புரோக்கர்களின் அராஜகத்துக்கு அளவேயில்லை. தனது இரண்டரை வயது குழந்தைக்கு அவசரமாக இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு பணமில்லாத காரணத்தால், கிட்னி தானம் செய்ய சம்மதித்தவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் வாங்கித் தருவதாக உறுதி கூறி கிட்னியை பெற்றுக்கொண்டபிறகு, அவருக்கு கூறியபடி பணம் தராமல் ஏமாற்றியதால், பாவம்!, அவர் கிட்னியை மட்டும் இழக்கவில்லை, தன் இரண்டரை வயது குழந்தையையும் இழந்து தவிக்கிறார்.

 இது மட்டுமா? மேற்கொண்டும், புரோக்கர்களுடன் ஒத்துழைக்காவிட்டால், கொலை செய்துவிடுவோம் என மிரட்டுகிறார்களாம்! அவர்களுக்கு அந்த அளவு துணிவை தந்துள்ளது, சில காவல்துறை அதிகாரிகளும் இந்த தொழிலில் பணத்துக்காக முழுவதும் ஈடுபட்டுள்ளதால்!

 மருத்துவ துறையில் உள்ளவர்களின் ஆதரவால், போலி சான்றிதழ் மற்றும் ஆள் மாறாட்டம் போன்ற குற்றங்களும் செய்யப்படுகின்றன!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.