(Reading time: 11 - 22 minutes)
Couple

விட்டுக்கொண்டே அமருவார்!

 நான் அருகில் சென்று என் சேலைத் தலைப்பால், அவர் முகத்தில் உள்ள வியர்வையை துடைப்பேன்!

அப்போது, அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு, என் முகத்தைப் பார்த்து, " நீ சாப்பிட்டியா?" என்று கேட்பார்.

 அதைக் கேட்டவுடனேயே, என் எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் எனக்கே மறந்துபோய்விடும்!

அவருக்காக, நான் சாப்பிடாமல் இருப்பது அவருக்குப் பிடிக்காது!

" வினிதா! நான் எத்தனை மணிக்கு வீடு திரும்புவேன் என எனக்கே தெரியாது. சில நாட்கள் பத்து மணிகூட ஆகிவிடும். அதுவரையில் நீ எதற்காக பசியோடு வாடவேண்டும்? எனக்கு சம்பிரதாயங்கள் எதுவும் பிடிக்காது என்று உனக்குத் தெரியுமே! யார் சாப்பாட்டை யார் சாப்பிடப் போகிறார்கள்? எல்லோருக்கும் சேர்த்துத்தானே சமைக்கிறாய்!" என்று வருத்தப்படுவார்.

அந்த வருத்தம் வெளிவேஷமல்ல; தூய்மையானது என்று என்னால் உணரமுடிகிறது.

நான் அவர் அருகில் அமர்ந்து அவர் சாப்பிடுவதைப் பார்த்து ரசிப்பேன். எனக்கு ஒரு ஆசை! அவருக்கு ஊட்டிவிடவேண்டும் என்று ரொம்ப ரொம்ப ஆசை!

ஆனால், அவரோ சாப்பிடும்போது பேசமாட்டார். ஏன்? சப்புக் கொட்டிக்கொண்டு ரசித்துக்கூட சாப்பிடமாட்டார்! "ஆகா! ரொம்ப டேஸ்டாயிருக்கே!" என்றெல்லாம் தன் ரசனையை தெரிவிக்கமாட்டார்!

  எனக்கு ரொம்ப ஏக்கமாயிருக்கும். அந்த ஏக்கத்தை ஒரே நொடியில் தவிடுபொடியாக்கும்படி ஒரே ஒரு வார்த்தை, சாப்பிட்டு முடிந்து, கைகளை டவலில் துடைத்துக்கொண்டே சொல்வார்!

" வினி! நான் ரொம்ப கொடுத்து வைத்தவன், இந்தமாதிரி ஒரு அன்புள்ள மனைவி கிடைப்பதற்கு!"

அந்த ஒரு வார்த்தையிலேயே நான் கரைந்து போய்விடுவேன்!

இன்றுகாலை என்னை ஆச்சரியக் கடலில் மூழ்கடிப்பதுபோல, அவரே காலை படுக்கையிலிருந்து எழுந்ததும், என்னை கட்டியணைத்து முத்தமிட்டு "வினி! இன்று 'மனைவிகள் தினம்'! ஈவினிங் சீக்கிரமே வந்துவிடுகிறேன், இருவரும் வெளியே ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவோம், நீ தயாராயிரு!" என்று சொன்னார்.

"'மனைவிகள் தின'மா? நான் கேள்விப்பட்டதே இல்லையே! அம்மாக்கள் தினம், அப்பாக்கள் தினம், தாத்தா-பாட்டி தினம், கேள்விப்பட்டிருக்கிறேன், 'மனைவிகள் தினம்'னு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும்"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.