(Reading time: 11 - 22 minutes)
Couple

திடீரென ஏதாவது வேலை வந்திருக்குமோ, என்னவோ!

அப்படி வந்திருந்தாலென்ன, எனக்கு தகவல் தெரிவிக்கக்கூடாதா?

அவரைக் குறைகூறிப்பயனில்லை! அவருடைய தொழில் அப்படி!

 கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறவர்கள் அவரிடம் ஆலோசனைக்கு வந்தவண்ணம் இருப்பார்கள், பத்து நிமிஷம் பேச வந்தவர்கள் நீண்டநேரம் எடுத்துக்கொள்வார்கள், ஏன், பல துறைகளைச் சார்ந்த எக்ஸ்பெர்ட்ஸ்களுடன் கூடி கான்ஃபரென்ஸே போடுவார்கள்!

இன்றும் அவர் எதிர்பாராமல் அப்படி ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டாரோ என்னவோ!

 பரவாயில்லை, இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே வைத்துக்கொள்வோம் என்று எண்ணி சமையலறைக்குள் நுழைந்து உணவு தயாரித்தேன்.

மணி இரவு எட்டு! அவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் என்னைப் பேசவிடாமலே, " நான் ஒரு மீட்டிங்கிலே இருக்கேன், பிறகு நானே அழைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்!

புரிந்தது! தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, சொந்த வாழ்க்கை என்பது இரண்டாம் பட்சம்தான்! காரணம் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அவர்களை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தவர்களை கைவிடமுடியுமா?

அவர்களுக்கு வசதிகள் இருக்கலாம், குடும்பத்தினரிடம் அளவுகடந்த பாசமும் அன்பும் இருக்கலாம், மனைவி, பெற்றோர், குழந்தைகளுக்கு நிறைய ஆதரவு தர துடிப்பிருக்கலாம், ஆனால் நேரமில்லையே!

இதுதான் இன்றைய வாழ்வின் அவலநிலை!

 ஒருவருடைய வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் நேரம்ஒதுக்கவேண்டும், ரொம்ப முக்கியமானவைகளுக்கு நிறைய நேரம் ஒதுக்கினாலும், மற்றவைகளுக்கும் அவ்வப்போதாவது, சிறிது நேரம் ஒதுக்கவேண்டும்.

 இவைகளை யாருக்கும் நாம் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை, அவரவர்களுக்கே நன்றாகத் தெரியும்.

ஆனால், அவர்களால் சில விஷயங்களிலிருந்து பிய்த்துக்கொண்டு வரமுடியவில்லை!

ஆடி அடங்கியபின், முதுமையில்தான் அவர்களுக்கு தங்கள் வாழ்வில் சமன் இல்லாமல் போய் எத்தனையோ சுவைகளை இழந்ததைப் புரிந்துகொள்கிறார்கள்!

கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாலும், குழந்தையின் சிரிப்பை கண்டு களிப்பதையும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.