(Reading time: 11 - 22 minutes)
Couple

மழலையை கேட்டு மகிழ்வதையும், மனைவியுடன் தனிமையில் கொஞ்சிப்பேசுகிற இதயப் பரிமாற்றலையும் பெறமுடியுமா?

காலம் தவறியபின் வருந்திப் பயன் என்ன?

 கடிகாரம் தன் கடமையை சரிவர செய்கிறது. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

மணி பத்து! அவர் வந்துவிட்டார்.

ஓடிப்போய் அவரை வரவேற்றேன். அவர் கையில் ஒரு பேக்கட்!

நான் அதை கவனித்தாலும், அவருடைய பிரீஃப் கேஸை மட்டும் வாங்கிக்கொண்டேன். அந்தப் பேக்கட் எனக்கு வாங்கிவந்திருக்கிற பரிசுப்பொருளாக இருக்கலாம்!

அவரே கொடுக்கட்டும்!

நேரங்கழித்து வந்ததற்கு வருத்தம் தெரிவிப்பார் என எதிர்பார்த்தேன்.

அவர் பொத்தென சோபாவில் சாய்ந்து கண்களை மூடி சிறிது நேரம் மௌனமாயிருந்தார். வழக்கம்போல் நான் என் சேலைத் தலைப்பால் அவர் முகத்திலிருந்த வியர்வையை துடைத்தேன்!

 வழக்கமாக அவர் என்னை கேட்பாரே, அந்த " நீ சாப்டியா?" என்பதுகூட கேட்கவில்லை!

  ஏதோ ரொம்ப சீரியஸான விஷயம் போலிருக்கு, சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்.

 நான் சமையலறைக்குச் சென்று, அவருக்கு உணவைப் பிசைந்து தட்டில் எடுத்துவந்து, அவருடைய வாயில் பலவந்தமாக ஊட்டினேன், பாவம்! பசி போலிருக்கிறது, மதியம் சாப்பிட்டாரோ இல்லையோ!

இரண்டு வாய் ஊட்டியபிறகு, சிறிது நிதானத்துக்கு வந்தார். என்னைப் பார்த்தார், தீர்க்கமாகப் பார்த்தார்!

 கண்களிலிருந்து நீர் கொட்டியது!

 " வினி! நான் பெரிய தவறு செய்துவிட்டேன், என்னைப்போன்ற தொழிலதிபர்கள் திருமணமே செய்துகொள்ளக்கூடாது, அல்லது தொழிலில் முழுவதுமாக ஈடுபடக்கூடாது! பணம்! பணம்! அந்த வெறி, புகழுக்காக நாயாய், பேயாய் அலைவது, எங்களையே தொழிலுக்கு அடிமையாக்கிக் கொள்வது! மனிதனா நான்? மகா பாபி! ஒரு அபலைப் பெண்ணை, வாழ்க்கையைப் பற்றிய ஆயிரம் கனவுகளோடு என்னை நம்பி வந்தவளை நாள்முழுவதும் வீட்டில் தனிமையுடன் பேசிக்கொண்டிருக்கவைத்த பாவி நான்! போதும்! சம்பாதித்தது போதும்! புகழ் பெற்றது போதும்!

வினி! நான் தொழிலை சிறிது காலம் நிறுத்திவிட்டு, உன்னையும் என்னைப் பெற்றவர்களையும் கவனிக்கவும் அன்பு செலுத்தவும் முழு நேரமும் செலவழிக்கப் போகிறேன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.