(Reading time: 11 - 22 minutes)
Couple

"இருக்கட்டுமே! நான் ஆரம்பித்து வைத்ததாக இருக்கட்டுமே! உனக்கொரு விஷயம் தெரியுமா? ஒருவனுடைய வாழ்வில், பெற்ற தாய்-தந்தையருடன் வாழ்கிற காலத்தைவிட, அதிக காலம் தன் மனைவியுடன்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்வின் துவக்கத்தில் இணைகிற மனைவிதான், அவனை உடனிருந்து அன்பையும் பாசத்தையும் அவன்மீது கொட்டி அவனை நல்ல மனிதனாக வாழச் செய்கிறாள். அவன் நிம்மதியாக தன் வேலையிலோ, தொழிலிலோ, ஈடுபட்டு நிறைய வருமானம் ஈட்டி சமூகத்தில் குடும்பமே கௌரவமுடன் வாழ அவள்தான் ஆதார சுருதி! அவன் துரதிர்ஷ்டவசமாக நோயில் படுத்துவிட்டால், அவள்தான் இரவும் பகலுமாக உடனிருந்து, மருந்து, மாத்திரைகளைவிட அதிக ஊட்டச்சத்தாக அன்பை வழங்கி அவனை மீட்கிறாள். இவைகளயெல்லாம் தவிர, அவனுடைய முதுமையில் தள்ளாமையில், தள்ளாடுகிற நாட்களில், பெற்ற பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், இருபத்துநான்கு மணி நேரமும் உடனிருந்து, அவனுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே உற்சாகம் தந்து...........அப்பப்பா! அப்போது ஒரு ரசாயன மாறுதலே நிகழும், தெரியுமா? ஆம், அப்போது, மனைவி தாயாகிறாள்!

சத்தியமாகச் சொல்கிறேன், என் தாயின் வாழ்வைப் பார்த்து நான் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன், ஒவ்வொருவனுக்கும் மனைவி வாழ்வில் துணைவியாகத துவங்கி, குடும்பத் தலைவியாக வளர்ந்து, இறுதியில் இரண்டாம் தாயாகிறாள்!

எங்கள் குடும்பத்தில், என் தாத்தா-பாட்டி இருவரையும் அவர்களுடைய முதுமையில், கவனித்துக்கொண்டது, என் தாய்தான், தந்தையல்ல! அப்பாவுக்கு வெளியில் போய் வருமானம் ஈட்டி குடும்பத்தின் பொருளாதாரத்தை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு!

தன் பெற்றோரை முழுநாளும் கவனித்துக்கொள்ள அவருக்கு நேரமிருக்காது.

 என் அம்மாதான், வீட்டுவேலைகளையும் சமையலையும் கவனித்துக்கொண்டு, என் தாத்தா-பாட்டியை டாக்டரிடம் அழைத்துப்போவது, மருந்து மாத்திரை வேளாவேளைக்கு சாப்பிட்டார்களா என கவனித்துக்கொள்வது, அவர்களுக்கென தனிச் சமையல் தயாரிப்பது, அவர்களுடன் சென்று தினமும் 'வாக்கிங்' பயிற்சி செய்வது....உனக்கே ஆச்சரியமாயிருக்கும், தாத்தாவுக்கு இருமுறை, பாட்டிக்கு இருமுறை கண்களுக்கு கேடராக்ட் ஆபரேஷன்,பாட்டிக்கு கால்முட்டிவலி நோய் சிகிச்சை, தாத்தாவுக்கு காது கேட்காத பிணிக்கு ஹியரிங் எய்ட் வாங்கித் தந்தது, தாத்தாவின் இருதயநோய்க்கு அவ்வப்போது எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., ஸ்கேனிங், ரத்தப் பரிசோதனை, தைராய்ட் பரிசோதனை.........அப்பப்பா! அத்தனையும் தன்னந்தனியாக முழுக்க முழுக்க கவனித்துக்கொண்டது, என் தாய்தான்! என் தாத்தா-பாட்டி இருவருமே,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.