கொண்டே வெளியில் வந்தவள் வரவேற்பறையில் தன் மாமியார் தன் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டி விடுவதைப் பார்த்ததும், தான் தவறினாலும் நேரா நேரத்திற்கு தன் பேரக்குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் தன் மாமியாரை சமாதானமான குரலில் அழைத்தாள்.
“அத்தை, என்னை மன்னிச்சிருங்க. நீங்க பண்ணினது என் மனசுக்கு தப்புனு பட்டுது. அதனால கேட்டுட்டேன். எதையும் மனசுக்குள்ள வைச்சுட்டு வெளியே என்னால சிரிக்க முடியாது. இப்ப பாருங்க உங்ககிட்ட கேட்டுட்டதுல கோபம் போயிருச்சு. இனிமே இந்த விஷயத்துக்காக உங்களிடம் சண்டை போட மாட்டேன். ஆனா வேற ஏதாவது தப்புனு பட்டா கேட்பேன்.”
“வேண்டாம்மா, நீ கோவம் வந்தா சண்டை போடுவே. அப்புறம் சமாதானம் ஆவே. அதுக்கு இப்படியே பட்டும்படாம இருந்துக்கறேன்”.
“அதான் இந்த பிரச்சனையை விடுங்கன்னு சொல்றேன்ல. வீடு கலகலனு இல்லாம நல்லாவே இல்லை. என்னால ஒரே வீட்டுல இருந்துட்டு பேசாம எல்லாம் இருக்க முடியாது”.
எதுவும் பேசாமல் ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார். குழந்தைகள் போதும் என்று கூற அவர் மிச்சம் இருந்த சாதத்துடன் தட்டை நீட்டியவாறே “இதை உங்கம்மாவ சாப்பிடச் சொல்லுங்க” என்றார்.
தட்டை கையில் வாங்காமல், “அப்படியே அந்த சாதத்தை இரண்டு உருண்டை பிடிச்சு எனக்கு ஊட்டிவிடுங்க. இல்லைன்னா அப்படியே கொண்டு போய் போடுங்க” என்றாள்.
“ஆமா, இந்த வேலையையும் உனக்கு நான் செய்யணுமா?” என்று அங்கலாய்த்தவாறு ஒரு பெரிய உருண்டையாக உருட்டி மொத்த சாதத்தையும் அவள் வாயில் திணித்தார். குழந்தைகள் அவள் படும் பாட்டைப் பார்த்து சிரித்தனர். வாய்கொள்ளா சாதத்துடன் தன் கணவனை சமாதானம் செய்வதற்காக அறையினுள் வந்தவளை அதிசயமாகப் பார்த்தவன்,
“அம்மா கூட சமாதானம் ஆகிட்டியா?”
“ஆமா, ஏன்?”
“கொஞ்ச நேரம் வரைக்கும் கோவமா இருந்தே. இப்ப எப்படி டக்குனு சமாதானம் ஆனே?”
அவனருகில் வந்து அமர்ந்தவள், நம்ம வீடு அழகான் குருவிக்கூடு. அது என்னைக்கும் கிரிச், கிரிச்னு குட்டிக் குருவிங்க சத்தத்தோட சந்தோஷமா இருக்கணும். எனக்கு உன் மேல உயிர். அதனால உனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துட்டேன். அந்த அளவுக்கு உன்னை விரும்பறேன்.” எனக் கூறியவளைப் பார்த்து,