(Reading time: 11 - 21 minutes)
Couple

“உங்க பேரைச் சொல்லி வைச்சிருந்தா இப்ப பிரச்சனையே இல்லை. அது உங்க இரண்டு பசங்களுக்கும் பொதுவா போயிருக்கும். இப்ப அவர் கைல வெச்சு தந்ததுனால அவர் மொய் வைச்சதாக தான அர்த்தம். இது நியாயமா?” என்று கேட்டாள். விவாதம் தொடர்ந்தது. சுகுமார் காதுக்கும் விஷயம் போனது. நடந்தது நடந்துவிட்டது. பிரச்சனையை விடு என்று கூறினான். ஆனால் ஹேமாவால் அப்படி இருக்க முடியவில்லை. மாமியார் தங்களிடம் ஓர வஞ்சனை செய்வது போலவும், தங்களை ஏமாற்றியதாகவும் நினைத்து கோபமாக இருந்தாள். அதன் பிறகு பத்து நாள் மாமியார் மருமகள் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. எப்பவும் தானாக சமாதானம் ஆகும் அவளால் இந்த விஷயத்தில் மாமியாரை மன்னிக்க முடியவில்லை. அதுவும் அவர் அந்த பவுனை தன் கையில் இருந்து வாங்கி அவர்களிடம் தந்து வைக்கச் சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை.

இந்தப் பிரச்சனையால் வீடு இருந்த நிலை சுகுமாரை எரிச்சல் பட வைத்தது. தன் மனைவி சொல்வது நியாயமாகத் தான் தெரிந்தது. அவனுக்கும் அப்போது பணக்கஷ்டம் இருந்தது அவன் தாய்க்கும் தெரிந்து இருந்தும் தன்னைத் தனியே கம்மல் வாங்க சொன்னதும் சிரமப்பட்டு தான் பணம் புரட்டி வாங்கினான். ஆனால் இதைக் காரணமாக வைத்து தன் தாயிடம் சண்டையிட அவன் விரும்பவில்லை. ஏனென்றால், சிறு வயது முதலே அவன் அம்மா செல்லம். ஹேமாவிடம் இதமாக சொல்லிப் பார்த்தான். அவள் நாம் என்ன இளிச்சவாயங்களா எனக் கேட்டு சமாதானத்துக்கு வர மறுத்தாள். குழந்தைகளும் வீட்டில் இருந்த இறுக்கமான சூழலில் யாருடனும் விளையாடாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமைதியாக அமர்ந்து இருந்தனர். யாரிடமாவது போனால் கோபத்தில் திட்டி விடுவார்களோ என அவர்களுக்கு பயம்.

இதன் பின்னர் மேலும் ஒரிரு நாள் சுகுமார் ஹேமாவிடமும் சரி, தன் தாயிடமும் சரி பேசுவதைக் குறைத்துக் கொண்டான். வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டு விட்டு எதுவும் பேசாமல் போய் அறையில் படுத்துக்கொண்டான்.

இதைக் கண்ட ஹேமாவால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. தேவையில்லாத காரணங்களினால் தானும் தன் கணவனும் விலகி இருப்பதை அவள் புரிந்து கொண்டாள். அவனுக்கு தான் உறுதியளித்தது நினைவுக்கு வந்தது. தன் உயிரினும் மேலான கணவனுக்கு தான் நிம்மதி தர வேண்டும் அதனால் தான் பணிந்து போனால் தவறில்லை என்று முடிவு செய்தாள். கேவலம் இருபதாயிரம் மதிப்புள்ள ஒரு பொருளுக்காக சொந்தங்களை காயப்படுத்த வேண்டாம் என்று தனக்கு தானே கூறிக்கொண்டாள். இதை நினைத்துக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.