(Reading time: 13 - 26 minutes)
Couple

வரக்கூடிய பிசினஸ்! சரி, வா! அண்ணனை கவனிப்போம்! அவர் எப்ப வந்தார்? ஏதாவது விசேஷமா?"

 இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

 " சத்யா! எப்படி இருக்கே? ரொம்ப களைப்பா இருந்தால், நீ ஓய்வு எடுத்துக்க! நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்......"

 "அதெல்லாம் ஒண்ணுமில்லே, மச்சான்! உட்காருங்க! நீங்க எப்படி இருக்கீங்க? குடும்பத்திலே எல்லோரும் நல்லா இருக்காங்களா?"

 " சத்யா! எல்லோரும் நல்லா இருக்கோம். போன காரியம் வெற்றிதானே?"

 " கடவுள் புண்ணியத்திலே நல்லபடியா முடிஞ்சுதுங்க!....."

 " கடவுள் பண்றது எப்பவும் எல்லோருக்கும் சரியா இருக்கிறதில்லே சத்யா! ஊரிலே நிறையபேர் அயோக்கியத்தனமா நடந்துக்கறாங்க, அவங்களுக்கும் கடவுள் துணை போறாரு......."

 " மச்சான்! நீங்க பெரியவங்க! சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க! நம்மாலே, ஏன் எந்த மனுஷனாலேயுமே, கடவுள் பண்றது சரியா, தப்பான்னு புரிஞ்சிக்க முடியாது! எது நடந்தாலும், ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்குது. முக்கியமா, நமக்கு நல்லது செய்வதற்காகவே கடவுள் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும், எல்லோருக்கும் செய்கிறார். அது முதல்லே, கெடுதல் போல தோன்றும், இறுதியில் பார்த்தால், அது ரொம்ப நல்லதாக முடியும்! நம்பிக்கை வேண்டும்........."

 " இந்த வேதாந்தம், சத்யா!, நடைமுறையிலே சாத்தியமில்லே! நான் உன்னை நம்பி பணம் கடன் கொடுக்கிறேன்னு வைச்சிக்க, அந்தப் பணத்தை தூக்கிக்கிட்டு நீ தலைமறைவாகிட்டால், அதுவும் அந்தப் பணம் எனக்கு முக்கியமா தேவைப்படுகிறபோது கிடைக்கலேன்னா, வேதாந்தம் பேசமுடியுமா என்னாலே? சொல்லு!"

 " மச்சான்! ஒப்புக்கிறேன், அது கஷ்டந்தான்! ஆனால், அதே நேரத்திலே கடவுள் ஏதோ ஒரு நல்ல காரணத்துக்காக அந்தப் பணம் உங்களிடம் அந்த நேரத்திலே இருக்கக்கூடாது, அப்படியிருந்தால் உங்களுக்கு ஏதோ தீங்கு நடந்துவிடும் என்பதற்காக அந்தமாதிரி ஏற்பாடு செய்திருக்கலாம் இல்லையா?"

 " இல்லே சத்யா! உலகம் ரொம்ப மோசமாகப் போயிடுத்து! நல்லதுக்கும், நல்லவனுக்கும் காலமேயில்லே, இது கலியுகம்! நம்பிக்கை துரோகம் செய்கிறவங்களை கழுவில் ஏற்றவேண்டும்....."

 " மச்சான்! நமக்கு எந்த எந்த நேரத்தில் எல்லாம், இப்படி வெறுப்பும் சலிப்பும் ஏற்படுகிறதோ,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.