(Reading time: 18 - 35 minutes)

செய்யலேன்னா, உன்னை வாட்ச்மென் வேலையிலிருந்து நீக்கிடுவேன், குடும்பத்தோட நீ நடுத்தெருவுக்கு வந்துடுவே, புரியுதா?" ன்னு மிரட்டிட்டுப் போயிருக்கிறாரு......."

 " மாமா! எப்பவும் சொல்றதைவிட, இப்ப கொஞ்சம் கூடுதலாகவே பயமுறுத்தி வைச்சிருக்கேன், நான் சொல்றதை கேட்டவுடனேயே, அப்படியா நமக்கு வேண்டாம் இந்த சொத்துன்னு வந்தவங்க ஓடறாங்க....நீ கவலைப்படாதே........."

 " விவரமா சொல்லு...."

 " முதல்லே, ராத்திரியிலே பங்களாவிலிருந்து கொலுசு சத்தம் கேட்குது, பேய் நடமாட்டம் இருக்குதுன்னு சொன்னேன், பிறகு 'க்ரீச்'னு கத்தி அழுவுற சத்தம் வருதுன்னு சேர்த்துக்கிட்டேன், இப்பல்லாம் பகலிலேயே சத்தமும் அழுகையும் கேட்குதுன்னு கதை சொல்லிக்கிட்டிருக்கேன்..."

 " பிரமாதம்! ஒரு பய விலைக்கு வாங்க இனி வரமாட்டான், நம்ம காட்டிலே மழைதான்...."

 ஆமாம் மாமா, இப்படி வந்தவங்களையெல்லாம், விரட்டச் சொல்றாரே, அந்த ஏஜெண்ட், எதனாலே?"

 " அதுவா? இந்த பங்களாவை யாராவது விலைக்கு வாங்கினபிறகு, ஏஜெண்ட் தேவையில்லையே, இவருக்கு வேலை கிடையாதே, சம்பளம் கிடைக்காதே.....அதுக்குத்தான், தள்ளிப் போகிற வரையிலும் லாபம் தானே!"

 " சரி, சரி, நமக்கும் மாசாமாசம் கிடைக்கிற பணம் தரமாட்டாரே, மாமா! நீயும் இனிமேல் பேய் கதை சொல்ல என்னோட சேர்ந்துக்க!"

 இப்ப, புரோக்கர் வீட்டுக்கு கேமிராவை திருப்புவோமா?

 " ஏங்க! பேய் நடமாட்டம் இருக்கிற இடத்தை யாரும் வாங்கமாட்டாங்களே, அப்ப எப்படி நாம நாலு கோடிக்கு விற்கமுடியும்? அதை யோசிக்க வேண்டாமா?"

 " காசி! அதுக்கு ஒரு ஐடியா வச்சிருக்கேன். கேரளாவிலிருந்து ஒரு நம்பூதிரியை அழைத்து வந்து பெரிய யாகமும் பூசையும் பண்ணச்சொல்லி, அவரு பேயை ஓட ஓட விரட்டிட்டாருன்னு விளம்பரப் படுத்திடுவோம், என்ன, ரெண்டு லட்ச ரூபாய் செலவாகும், நமக்கு வர லாபத்திலே அந்தச் செலவு ஒண்ணும் பெரிசில்ல...."

 " பிரமாதமான ஐடியாங்க! சரி, ஒரு கோடிக்கு யோசித்தீங்களா?"

 "கிராமத்திலே நமக்கிருக்கிற வீடு, நிலத்தை விற்று நாற்பது லட்சம் கிடைக்கும். அதை முன்பணமா கொடுத்து வெளிநாட்டிலே இருக்கிற பங்களா சொந்தக்காரன்கிட்ட ஒரு அக்ரிமெண்ட் போட்டு, அதை பேங்கிலே அடமானமா வைத்து மீதி அறுபது லட்சத்தை கடனா வாங்கி பங்களா ஓனருக்கு தந்து நம்ம பேருக்கு பங்களாவை மாற்றிடுவோம். எப்படி நம்ம

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.