(Reading time: 18 - 35 minutes)

போய்விடுவேன், பிறகு எந்த மனிதன் முகத்திலும் விழிக்கமாட்டேன், பார்த்தால் காறித் துப்புவேன்!......"

 இருவருக்கும் குலை நடுங்கியது.

 " அப்பப்பா! ஒருத்தன்கூட யோக்கியனில்லே, எல்லா மனிதர்களுமே கடைந்தெடுத்த அயோக்கியர்கள்! ஒருத்தரை ஒருத்தர் எப்படியெல்லாம் ஏமாற்றுக்கிறீங்க, கூசாமல் பொய் சொல்றீங்க, முதுகிலே குத்தறீங்க! த்தூ! இப்படியும் வாழணுமா? சரி,

 ஒரு நிமிஷத்திலே ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிட்டு, போயிடறேன். கவனமா கேட்டு, மனித சமுதாயத்துக்கே நான் சொல்கிற இந்த செய்தியை சொல்லுங்க, காலம் முழுவதும்!

 இந்த பங்களா வாட்ச்மெனும் அவன் மனைவியும் ஏஜெண்டிடம் காசு வாங்கிகிட்டு புரளி கிளப்பினாங்க, அவங்களுக்கு நிஜமாகவே நான் பேயா நடமாடுவது தெரியாது, அது ஒண்ணு! ரெண்டாவது ஏஜெண்ட்! அவன் தனக்கு நீண்ட காலம் ஓனரிடமிருந்து சம்பளம் கிடைக்கணும் என்பதற்காக பொய், புரளி, கிளப்பிவிட்டு எவரும் பங்களாவை வாங்கவிடாமல் பண்ணினான், மூணாவது நீங்க! பயப்படாதீங்க, நீங்க சொன்னது ஒரே ஒரு பொய்தான், பத்து பதினைந்து பேர் பேய் நடமாட்டத்துக்கு பயந்துண்டு பங்களாவை வாங்காமல் ஓடிட்டாங்கன்னும், இப்ப யாரோ ஒரு ஏமாளி கையிலே ஒரு கோடி ரூபாயுடன் ரெடியா இருக்கிறதாகவும் சொன்னீங்களே, அது மட்டும்தான்........"

 "எங்களை மன்னிச்சிடும்மா! இவ்வளவும் தெரிஞ்சு வைச்சிருக்கியே, நீ யாரும்மா?"

 " இவ்வளவு சொல்றவ, அதை சொல்லாம போவேனா? அவசரப்படாதீங்க! வாட்ச்மென், ஏஜெண்ட், நீங்க மூவரும் சொன்னது ஒரு பொய்தான், ஆனா நாலாவது ஆசாமி ரெண்டு பொய் சொல்லி உலகத்தையே ஏமாற்றப் பார்க்கிறார். உங்களை நான் கேட்டுக்கிறதெல்லாம் இதுதான்! இதை நீங்க செய்யலேன்னா, நான் உங்களை சும்மா விடமாட்டேன், குடலை கிழிச்சு மாலையா போட்டுக்குவேன், ஞாபகத்தில் இருக்கட்டும்!

 இப்ப நான் சொல்றபடி, ஒழுங்கா நடந்துகொண்டு பெரிய மனிதனா உலாவுகிற பல பேருடைய முகத்திரையை கிழியுங்க!

 பங்களா ஓனர் இருக்காரே எங்க அப்பா! ஆமாம், நான் அவர் மகள்தான்!, அவர் மந்திரிகளை லஞ்சம் கொடுத்து கைக்குள்ளே போட்டுண்டு, தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மனையை சொந்தமாக்கிக்கிட்டு, குறைந்த செலவிலே சில லட்ச ரூபாயிலே பங்களாவை கட்டிட்டு, இப்ப அதை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப் பார்க்கிறார், அது அவர் செய்கிற முதல் தப்பு!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.