(Reading time: 13 - 26 minutes)

சிறுகதை - துணிந்து நில்! - ரவை

டையெனப் பெய்த மழையில் உயிர் விட்டது, கட்டிடம்!

அந்தக் கட்டிடத்தில் வசித்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த முப்பது பேரில் நாலைந்து பேரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் அந்த இடிபாட்டில் சிக்கி இடிபாட்டுக்கடியில் கிடந்தனர்.

 கூடுமான வரையில், அவர்களை உயிருடன் மீட்க, அரசு ஊழியர்கள், பெய்துகொண்டிருந்த பெருமழையில் பாடுபட்டனர்!

 அந்த நேரத்தில், ஏதோ அலுவலாக வெளியே போயிருந்த காரணத்தால், இடிபாட்டில் சிக்காமல் தப்பித்த, நாலைந்து நபர்களில் கேசவனும் ஒருவன்!

 அவன், அந்த மழையிலும், நகரத்தின் வேறொரு பகுதியில், வழக்கம்போல, ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்ததால், அவனுக்கு விஷயம் தெரியவே தாமதமாகிவிட்டது.

 விஷயத்தைச் சொன்னவர்கள், இடிபாட்டில் சிக்கிய அனைவரையும் அருகிலிருந்த மருத்துவ மனைக்கு ஆம்புலன்சு வைத்து அழைத்துச் சென்றுவிட்டதையும் விவரமாக தெரிவித்ததால், கேசவன் நேராக மருத்துவ மனைக்கு ஓடினான்!

 அங்கே உடனே ஓடியும், பயனில்லை; அந்த மருத்துவ மனைக்குள் மருத்துவர்களையும் உதவியாளர்களையும் தவிர, பொதுமக்கள், உறவினர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை!

 அப்போதுதானே, இடையூறின்றி, இடிபாட்டில் சிக்கியவர்களில் சிலரையாவது காப்பாற்ற சிகிச்சை செய்யமுடியும் என்ற நல்லெண்ணத்தில்தான், அந்தத் தடை!

 கேசவன், கொட்டும் மழையில், மருத்துவ மனைக்கு வெளியே, உள்ளேயிருந்து ஏதாவது செய்தி கசியுமா என்ற ஆவலில், கண்ணீருடன் காத்திருந்தான்.

 "கேசவா! இப்படி ஆயிடிச்சேடா! அவங்க உயிரோடிருக்காங்களா, இல்லையான்னு எந்த தகவலும் இல்லாம, மனசு கிடந்து தவிக்குதுடா!"

 தலை தூக்கிப் பார்த்தான், கேசவன்! அந்தக் கட்டிடத்தில், வசிக்கும் இன்னொரு குடும்பத்தின் தலைவன், மூக்கையா!

 அவனும் வங்கி ஒன்றில் கடைநிலை ஊழியனாக வேலை செய்பவன்!

 அவனுடைய மனைவி, குழந்தைகளை தவிர, வயதான பெற்றோரும் அவனுடன் வசித்தனர்.

 " அண்ணே! எனக்கு இப்பத் தாண்ணே, விஷயமே தெரிஞ்சு ஓடோடி வர்றதுக்குள்ளே, இங்கே கொண்டு வந்துட்டாங்க! நானும் யாராவது, ஏதாவது, தகவல் தருவாங்களான்னு காத்துக் கிடக்கிறேன், அங்கேயும் இங்கேயும் குறுக்கும் நெடுக்குமா, போய் வராங்களே தவிர, ஒருத்தரும் வெளியே வந்து ஒரு தகவலும் தரமாட்டேங்கறாங்கண்ணே......!"

 " கேசவா! யோசித்துப் பார்த்தா, அவங்கமேலே தப்பில்லைப்பா! அந்தக் கட்டிடத்திலே வசித்த முப்பது பேரிலே, உன்னையும் என்னையும் போல, எத்தனை பேர் வெளியிலே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.