(Reading time: 13 - 26 minutes)

 " இடிபாட்டிலே சிக்கினவங்க ஒருத்தர், இருவராவது கைகாலை அசைத்தாங்களா?ஏதாவது பேசினாங்களா? அதிலே குழந்தைங்க இருந்தாங்களா, அழுகை சத்தம் கேட்டுதா?"

 " தெரியலியே! பொதுமக்கள் யாரையும் கிட்ட நெருங்க விடலே, தவிர, போலீஸ் காவல் வேறே! இந்த சமயம் பார்த்து, கிடைச்ச வரையிலும் ஆதாயம்னு சுருட்டறவங்க எத்தினி பேரு நம்ம சனங்களிலே!"

 " ஆமாமாம்! நீ சொல்றது உண்மை! போன மாசம் கூடலூர் ரயில் விபத்தின்போது, நான் பார்த்தேன், ச்சே! பரிதாபமே இல்லாம, நகை நட்டு, பணம், எல்லாத்தையும் திருடினானுங்க, கேப்மாரிங்க!"

 இப்படி பேசிக்கொண்டே அவர்கள் நகர்ந்ததும், கேசவனும் மூக்கையாவும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட பார்வையில் பொதிந்திருந்த கேள்விகள், அந்த காளியம்மனுக்கே வெளிச்சம்!

 ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு, இருவரும் மருத்துவமனை கேட்டுக்கு வந்து நின்றனர்.

 அப்போது உள்ளிருந்து ஒருவர் வெளியே வந்தபோது, அவரை கேசவனும் மூக்கையாவும் மற்றவர்களும் சூழ்ந்துகொண்டு, கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

 " இத பாருங்க! இப்ப ஒண்ணும் சொல்லமுடியாது! குழந்தையிலிருந்து பெரியவங்க வரையிலும் எல்லாருக்கும் சிகிச்சை தொடங்கியிருக்கு, எத்தினிபேர் உயிரை காப்பாற்ற முடியுங்கறதை இப்ப எதுவும் சொல்லமுடியாது......"

 " அப்படின்னா, இதுவரையிலும் எந்த உயிரும் பிரியலேன்னு சொல்றீங்களா? நல்ல செய்திங்க!....."

 " அப்படியில்லே, எல்லாருமே நினைவில்லாம கிடக்கறாங்க! அவங்களுக்கு சிகிச்சை தந்தபிறகுதான், அவங்களுக்கு நினைவு திரும்ப வருதா, இல்லையான்னு தெரியும்....தயவுசெய்து, எனக்கு வழி விடறீங்களா? என் வீட்டிலே மின்சாரம் லீக் ஆகி தீவிபத்துன்னு செய்தி வந்து நான் அங்கே ஓடிக்கிட்டிருக்கேன்......"

 " பாவம்ப்பா! இந்த மழையிலே, எத்தனை வீடுகளிலே என்னென்ன நாசமோ, எத்தனை பேருக்கு என்னென்ன கஷ்டமோ.....? "

 " இந்த மழை இருக்கே, ஒண்ணு பெய்யாம கழுத்தறுக்கும், இல்லேன்னா பெய்து உயிரெடுக்கும்! மொத்தத்திலே, நமக்கு மனுசங்க விரோதமா இருப்பது போதாதுன்னு, மழையும் சேர்ந்துகிச்சு!"

 " நாம இயற்கையை சீண்டினா, அது தன் வேலையை காட்டுது! காட்டை அழிச்சு, மரத்தை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.