(Reading time: 13 - 26 minutes)

வெட்டி, வீடு கட்டறோம், ரோடு போடறோம், யானையும், குரங்கும், பாம்பும், இருக்க இடமில்லாம ஊருக்குள்ளே வந்து நம்ம உயிரை எடுக்குது........."

 " பாவம்! அதுகளுக்கு குடிக்க தண்ணீர்கூட இல்லாம, ஊருக்குள்ளே வருதுங்க! அதை புரிஞ்சிக்காம, நாம அதை விரட்டினா, அதுங்க நம்மை பந்தாடுதுங்க!"

 இதற்குள், உள்ளிருந்து இன்னொருவர் வெளியே வந்தார்.

 அவரையும் வழி மறித்து, மக்களும் செய்தி நிருபர்களும் சூழ்ந்துகொண்டனர்.

 " அமைதியா, பொறுமையா கேளுங்க! சிகிச்சை நடந்துகிட்டிருக்கு! திட்டவட்டமா இப்ப எதையும் சொல்ல முடியாது, ஆனா, ஒரு சந்தோஷமான விஷயம்! சில பேருக்கு நினைவு வந்திருக்கு, மற்றவங்க நிலமை போகப் போகத் தெரியும்...எல்லாரும் கடவுளை வேண்டிக்குவோம், அவர்தான் காப்பாற்றணும், டாக்டர்கள் அவங்களாலே முடிஞ்சதை செய்யறாங்க...."

 " ரொம்ப நன்றி ஐயா!"

 " நான் வந்த விஷயத்தை சொல்லிடறேன், நினைவு வந்தவங்களிலே ஒரு பொம்பளை முனகல்லே, 'மாமா!'ன்னு சொல்லிச்சு! அவங்களுக்கு முப்பது வயசுக்குள்ளேதான் இருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்திலே அவங்க நல்லபடியா பேசினதும், அவங்களையே 'மாமா' யார்னு கேட்டு நல்ல செய்தி சொல்றேன், அதுவரையிலும் பொறுமையாயிருங்க! உங்க நிலமை எங்களுக்கு நல்லாப் புரியுது, மழையிலே நனைஞ்சுகிட்டே நீங்களும் காய்ச்சல்லே விழுந்துடாதீங்க, ஓரமா அந்த பஸ் ஷெல்டரிலே நில்லுங்க! நான் கூப்பிட்டதும் வாங்க!" என்று சொல்லிவிட்டு, உள்ளே திரும்பிச் சென்றார்.

 கேசவன், கண்களில் நம்பிக்கை கொப்பளிக்க, மூக்கையாவை பார்த்தான்.

 அவன் மனைவிக்கு இருபத்தைந்து வயதுதான். அவள் கேசவனை 'மாமா'ன்னுதான் அழைப்பாள்!

 மூக்கையாவுக்கு, கேசவனின் பார்வையில் நிரம்பி வழிந்த நம்பிக்கை தெளிவாகப் புரிந்தது!

 கேசவனை இறுக அணைத்து, " காளியாத்தா உன்னை கைவிடலே........!"

என்றதும், அவன் துயரம் பொங்கி இதயம் உடைந்தது!

 பஸ் குடையின்கீழ் காத்திருந்தவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையோ எதிர்பார்ப்புகள்! பிரார்த்தனைகள்! பிரிவாற்றாமை! இதய வெடிப்புகள்!

 நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மழை சிறிது குறைந்திருந்தது. காத்திருந்தவர்களில் பலர் மறுபடியும் கேட்டருகே வந்து நின்றனர். சிலர் அருகிலிருந்த டீக்கடையில் பசியாறினர்.

 கேசவன் மனதிற்குள் பிரார்த்தனை செய்தவாறு, கேட்டருகே நின்று, மருத்துவ மனையையே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.