(Reading time: 7 - 13 minutes)

 காரணம், அவர்களுக்கு பிள்ளைப்பேறு இல்லாமையே என பொதுவாக அவர்களை நன்கு தெரிந்தவர்கள் நம்பினர்.

 மருத்துவப் பரிசோதனையில், பிள்ளையில்லாமைக்கு காரணம் கணவனே என தெரிந்துவிட்டது.

 மனைவி அவனுக்கு ஆறுதல் கூறி, சொந்தக்கார குடும்பத்திலிருந்தே ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கலாமென அவனை உற்சாகப்படுத்தினாள்.

 பிறகுதான் தெரிந்து, புரிந்தது, அவன் தனது குறையையே சாதகமாக்கிக் கொண்டு, வீட்டுக்கு வெளியே நிறைய தொடர்பு வைத்துக் கொண்டான்.

 முதலில் மனைவி அவனை நேரிடையாக எச்சரித்தாள். தொழிலில் அடைந்துள்ள வெற்றியின் மூலம் கிடைத்துள்ள செல்வாக்கும் புகழும் கறைபட்டுவிடும் எனவும் கண்டித்தாள்.

 ஆனால் அவனோ, வருமான வரி அதிகாரிகளின் தொடர்பை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளவும், அரசாங்கத்தில் பெரிய பதவியில் உள்ளவர்களின் நட்பைப் பெறவும், கருவிகளாக தான் தொடர்பு வைத்திருந்த பாவைகளையே பயன்படுத்திக் கொண்டதோடு, அவர்களுடைய லீலைகளுக்காகவே தனி பங்களா விலைக்கு வாங்கி உபயோகித்து வந்ததையும் அறிந்தவுடன், மனைவி குடும்பத்தில் பெரியவர்களிடம் தெரிவித்து கண்டிக்கச் சொன்னாள்.

 பாவம்! அவர்களை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பணத்தை இறைத்து, கணவன் நிலைமையை சமாளித்தபோது, தம்பதிகளிடையே இருந்த விரிசல் பிளவாகியது!

 ஆனால், அவளால் அவனை ஒன்றும் செய்யமுடியவில்லை. எக்கேடோ கெட்டுப் போகட்டும் என மனைவி ஒதுங்கிவிட்டதாகத் தான் செய்தி கிடைத்தது.

 விழாவின்போது, அப்படி திடீரென அவள் வெடித்த காரணம்தான் ஒருவருக்கும் தெரியவில்லை!

 வழக்கம் போல, சில நாட்களில், வேறுபல செய்திகள் தொடர்ந்து வரவே, மக்கள் இதை மறந்து போனார்கள்.

 ஊடகங்களும்தான்!

 எல்லோரையும் மீண்டும் இதைப்பற்றி ஞாபகப்படுத்தவோ என்னவோ, கூவம் ஆற்றின் கரையில், ஒரு பெண்ணின் சடலம் ஒதுங்கியிருந்தது, மீண்டும் மக்களை உலுக்கி எடுத்தது!

 மேலும் ஆர்வத்தை தூண்டுவதுபோல, அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என செய்தி கசிந்தது!

 முத்தாய்ப்பாக, அந்தப் பெண்ணின் முகமும், கணவனின் முகத்தில், விழாவில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.