(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - பரிதாபத்தின் விலை! - ரவை

ங்களா அபார்ட்மெண்ட்ஸ் அன்று காலையிலிருந்தே களை கட்டியது!

 

 அன்று ஹவுஸ் ஓனர்கள் மீட்டிங்! பத்து ஓனர்கள்தான் அங்கே வசிப்பவர்கள். மீதி பத்து பேர் தங்கள் அபார்ட்மெண்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.

 

 வாடகைக்கு குடியிருப்போர்க்கு குதூகலம்! தங்கள் குறைகளை ஓனர்களிடம் நேரடியாக முறையிட ஒரு அரிய வாய்ப்பு!

 

 " புதுசா கார் வாங்கியிருக்கிறேன், பார்க்கிங் ஸ்பேஸ் வேணும்..."

 

 " குழாய்கள், பைப்லைன்கள் எல்லாம் துரு பிடிச்சிருக்கு, எல்லாவற்றையும் புதுசா மாற்றணும்........"

 

 " தூங்குமூஞ்சி வாட்ச்மெனை எடுத்துவிட்டு, யூனிபாரம் போட்ட செக்யூரிடி

 

வேணும்......."

 

 இப்படி ஒவ்வொரு வாடகைக்கு குடியிருப்போர், தங்கள் ஓனர்களிடம் முறையிட்டனர்.

 

 ஒன்பது பேர் போட்டி போட்டு குறை சொன்னபோது, ஒரே ஒருவர் மட்டும் ஓனரின் பார்வையில் படாமல் பதுங்கினார்.

 

 ஓனர், அவர் வீடு தேடி வந்து பார்த்தார்.

 

 " மாரிசாமி! மற்றவங்க எல்லாம் நிறைய குறை சொல்றாங்க, நீ ஒண்ணும் பேசாம பதுங்கறியே, ஏன்?

 

நீ சொன்னால்தானே, நான் அதை மீட்டிங்கிலே கேட்டு முடிவு எடுக்கமுடியும்......."

 

 " ஐயா! தேங்க்ஸ்! இப்ப இருக்கிற வசதியே போதும், எனக்கு வேற வசதி வேண்டாங்க.........."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.