(Reading time: 10 - 20 minutes)

சிறுகதை - குடிசையிலே மனமிருக்கு! - ரவை

"புள்ளே! ஊரடங்கு சட்டம், வெளியிலே தலைகாட்ட முடியாது, எங்கே காலைலே கிளம்பறே, வீட்டுவேலைக்கா?"

" ஆமாம், மச்சான்! பாவம், அவங்க பச்சப்புள்ளக்காரங்க! தண்ணிலே கையை வைச்சு பாத்திரம் களுவினா, சுரத்திலே படுத்துடுவாங்க, பச்சப் புள்ளைக்கு தாய்ப்பால் கெடைக்காது, நான் வேலைக்கு போய்த்தான் ஆவணும்......."

"புள்ளே! போலீஸு உன்னெ விடமாட்டானே.....?"

" ஒளிஞ்சு மறைஞ்சு போய்ட்டு வந்துடறேன்......"

 அஞ்சுகம் புள்ளிமான் போல, வெளியே துள்ளிவந்து, சாலையோரமா பதுங்கிப் பதுங்கி, தாவித் தாவி, கடந்தாள்.

 ஒருமைல் தூரம் கடந்தாகவேண்டும், பாதிதூரம் வந்துவிட்டாள், எவர் கண்ணிலும் படாமல்!

 வீதி வெறிச்சோடிக் கிடந்தது, , காக்காகூட கண்ணுலே படலே!

 எல்லாரும் கொரோனாவுக்கும் ஊரடங்குக்கும் பயந்து வீட்டுக்குள் முடங்கிவிட்டனர்.

 அஞ்சுகம் தன் வேகத்தை அதிகரித்தாள்.

 லபக்கென, ஒரு முரட்டுக்கை அவளை பிடித்து இழுத்தது!

 தலைதூக்கிப் பார்த்தாள். போலீஸ்!

 " எங்கே பதுங்கிப் பதுங்கி பாய்ந்து போறே? நட, போலீஸ் ஸ்டேஷனுக்கு!"

 அஞ்சுகம், அவன் காலில் விழுந்தாள்.

 " என்ன இது, கால்லே விழறே, எழுந்து வா!"

 " ஐயா! அவசரமா ஒரு இடத்துக்கு போய்க்கிட்டிருக்கேன், இந்தவழியாத்தான் திரும்புவேன், ஒருமணி நேரத்திலே! அப்ப நீங்க, போலீஸ் ஸ்டேஷனில்லே, எங்கே கூப்பிட்டாலும், வரேன், இப்ப என்னை விட்டுடுங்க! "

"சத்தியமா? எங்கே கூப்டாலும் வரியா?" என்று அசடு வழிந்தான்.

"சத்தியமா வரேன்"

"சரி, போ!"

 அஞ்சுகம் ஓட்டமாக ஓடி சேரவேண்டிய வீட்டை அடைந்து, மூச்சிறைக்க, கதவைத் தட்டினாள்!

 கதவை திறந்தது, ஐயா!

 " எங்கே வந்தே?"

 " வீட்டுவேலை செய்யத்தான்! அம்மா, புள்ள பெத்து ஒரு மாசம்தான் ஆவுது, பச்ச உடம்பு! தண்ணிலே, கையை வச்சு, பாத்திரம் களுவினா, சுரம் வந்துடும், பச்சப் புள்ளைக்கு தாய்ப்பால்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.