(Reading time: 10 - 20 minutes)

 "யாரு, மச்சான்? புச்சா இருக்கு?"

 "குந்து! வெலாவரியா சொல்றேன்!

 இவுரு, ஒரு பெரிய வூட்டுப்புள்ள! பெரிய படிப்பு படிச்சு, துபாய்ல, பெரிய வேலைல இருக்காராம்! வயசான அப்பா, அம்மா இந்த ஊர்ல தனியா இருக்காங்களாம், கொரோனா பயத்துல, துபாயிலேந்து, எப்படியோ தப்பிச்சு நம்மூர் வந்துட்டாரு!

 ஏர்போர்ட்டில, இவர டாக்டருங்க பரிசோதனை செஞ்சிட்டு, இவருக்கு நோயில்லேன்னு சொல்லிட்டாங்களாம், ஆனாலும் ரெண்டு வாரத்துக்கு தனியா இருக்கணுமாம். அதனால தன் வீட்டுக்குப் போக முடியாம, வேற எங்க போறதுன்னு தெரியாம முழிச்சிருக்காரு, அப்ப இவரை, நம்ம முனுசாமி இல்லே, ஆட்டோ ஓட்டறவரு, பார்த்துட்டு, "கவலப்படாதீங்க!"ன்னு தைரியம் சொல்லி, இங்க கொண்ணாந்து விட்டுட்டுப் போனாரு......"

 அஞ்சு! நாம கேட்கற பணத்த தரேங்கறாரு, நாம குடிக்கற கஞ்சியோ கூழோ குடிக்கறேங்கறாரு, நம்மோட இங்க ரெண்டுவாரம் தங்கறேங்கறாரு, அப்பப்ப, தலமறவா, அவங்க அப்பா, அம்மாவ போய் பார்த்துட்டு வருவாராம், வீட்டுக்கு வெளியிலிருந்தே!

 என்ன சொல்றே?"

" மச்சான்! நீ என்ன சொல்றே?"

 " பாவமாயிருக்கு! மேல இருக்கறவன் மேல, பாரத்த போட்டுட்டு, இவர இங்க வச்சுக்கலாம்னு நெனக்கறேன், ஆனா இது உசுரு சம்பந்தப்பட்ட விசயம்! என் உசுர பணயம் வக்க எனக்கு உரிமை உண்டு, ஆனா உன் உசுர நான் பணயம் வக்க கூடாதுல்ல, நீயே முடிவு சொல்லு!"

 "ஒரு நிமிஷம்!" என்று வந்திருக்கும் பெரிய மனிதர் சொன்னார்!

 " நீங்க கேட்கற பணம் எத்தனை ஆயிரமானாலும் தரேன், எனக்காக நீங்க ரெண்டு பேரும் உங்க உசுர பணயம் வக்காதீங்க! நான் தர்ற பணத்தில, சௌகர்மா வேறெங்கயாவது, தங்கிக்குங்க! நான்மட்டும் இந்த குடிசைல இருந்துக்கறேன், சாப்பாடு மட்டும், எனக்கு கொடுத்தனுப்பிச்சா போதும்!

 பத்தாயிரம் ரூவா இப்பத் தரேன், இது செலவானதும், கேளுங்க! மறுபடியும் தரேன், ரெண்டே வாரம், பதினாலே நாளு! இந்தாங்க, பணம்!"

 அஞ்சுகம், கண்ணீர் விட்டு அழுதாள்.

 வந்திருந்தவரும், அஞ்சுகத்தின் மச்சானும் பதறிப்போய், " என்னாச்சு, சொல்லு, புள்ள!" என்றனர்.

 " ஏழங்கன்னா, வெல பேசி, பணம் கொடுத்து, வாங்கிடலாங்கற பணக்காரங்க புத்தி இன்னும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.