(Reading time: 10 - 20 minutes)

போகலியேன்னு நெனச்சேன், அளுவ வந்துடுச்சு!

 நீங்க என்ன பண்ணுவீங்க, உங்கமேல தப்பில்ல, ரத்தத்திலே ஊறிடுச்சு!

 சரி, போவட்டும்! ஐயா! நீங்க தாராளமா இந்தக் குடிசேல தங்கிக்கலாம், எங்களோட!

ஒரு காசுகூட தரவேணாம், பிச்சை எடுத்தாவது, உங்களுக்கு சோறு போடறோம்!

 நாங்களும் இங்கேயே உங்ககூட தங்கிக்கறோம்! நீங்க அப்பப்ப சொல்ற வேலய செஞ்சுதரோம்! நீங்க, உங்க வீட்டுக்குப் போய்வர, உதவி செய்யறோம், இல்ல, உங்க அப்பா, அம்மாவ, இங்க அப்பப்ப கூட்டிக்கிட்டு வரோம்! என்ன மச்சான், செய்யலாமில்ல?"

 " தாராளமா புள்ள! ஐயா! பணம் நெறயா கொட்டிக் கிடக்கற இடத்துல, மனுஷனைக் காணோம்! பணமேயில்லாத இந்தக் குடிசேல, மனுஷத்தன்மை கொட்டிக் கிடக்கறத, நீங்க புரிஞ்சிக்கிட்டா போதும்!

 புள்ள! வந்ததிலேருந்து, அவரு ஒண்ணுமே சாப்பிடலே, அவருக்கு ஏதாவது சாப்பிடக் கொடு!"

 " இதோ, ஒரே நிமிசம்! மச்சான்! இந்தா, ஐநூறு பணம்! நான் வேல செய்ற வீட்டுல தந்தபோது, வேண்டாங்கன்னு சொன்னேன், அவங்களுக்கு நெறய செலவிருக்கும்னு சொன்னேன், ஆனா இப்பத்தான் தெரியுது, மேல இருக்கறவன், எல்லாம் தெரிஞ்சவன், நமக்கு செலவு வரப்போறது தெரிஞ்சு, நம்ம கைல பணத்தை திணிச்சிட்டான், ஐயா! இப்ப தெரியுதா? எந்த பெரிய மனுசன் எங்களுக்கு ஆதரவா இல்லாம போனாலும், மேல இருக்கறவன், எங்கள கைவிட மாட்டான்....."

 நெஞ்சடைக்க, கண்ணீர் வழிந்தோட, அஞ்சுகம், தலை குனிந்தபோது, அவள் காலடியில், துபாய்க்காரனின் தலை இருந்தது, தெரிந்தது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.