(Reading time: 10 - 20 minutes)

தரமுடியாது, தவிர, கொரோனான்னு பயமுறுத்துவாங்க, அதனாலே, அவங்களை கவனமா பார்த்துக்கணும்! வழியை விடுங்க! கிடுகிடுன்னு அரைமணிலே வேலையை முடிச்சிட்டு போயிடறேன்....."

 மூச்சிறைக்க பேசிவிட்டு, உள்ளே போக முயற்சித்தாள்!

 " இதப் பாரும்மா! விஷயத்தை புரிஞ்சிக்க! ஊரடங்கு ஏன் தெரியுமா? ஒருத்தரிடமிருந்து பலபேருக்கு கொரோனா வியாதி பரவாம இருக்க! நமக்கு நல்லது செய்யுது, அரசாங்கம்! நீ உன் குடிசைக்குள்ளேயே இருந்தா, உனக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது, இன்னும் ஒரு வாரத்துக்கு நீ இந்த வீட்டுப்பக்கமே வராதே!"

 "ஐயா! வந்தது, வந்துட்டேன்! இன்னிக்கி ஒருநாளாவது உதவி செய்யறேன், நான் வெளியேவே நிக்கறேன், நீங்க ஒரு பக்கெட்டிலே தண்ணியும், துலக்கவேண்டிய பாத்திரங்கள், கழுவுற பவுடர், எல்லாத்தியும் இங்கே வெச்சிருங்க! உம், போங்க!"

 சிரித்துக்கொண்டே, அவர் உள்ளே போய், எல்லாவற்றையும் கொண்டுவந்து வெளியே வைத்தார்.

 அஞ்சுகம், கால்களை மடக்கி, அமர்ந்து, தனக்குத்தானே பேசிக்கொண்டே, பாத்திரங்களை துலக்கினாள்.

 " படிச்சவங்கள்ளாம், ஏன் இப்படி பயந்து நடுங்கறாங்க? குடிசையிலே வாழற குப்பனும் சுப்பனும், வள்ளியும், பவுனுமா வியாதியை பரப்பறாங்க?

 துபாயிலிருந்து வரவங்க, அதுமாதிரி, வெளிநாட்டிலிருந்து வரவங்கதான், வியாதியை கொண்டுவராங்க, மத்தவங்களுக்கும் பரப்பறாங்க!

 போவட்டும், என்னை வராதேன்னு சொல்றாங்களே, காலைலே பால் பேக்கட், பேப்பர் போடறவனை தடுக்கறாங்களா?

 அதையும் விடுங்க, தினமும் குப்பை அள்ளிக்கிட்டு போறவள, நிறுத்தறாங்களா, வீட்டுக்கு வீடு கேஸ் போடறானே அவனை நிறுத்தமுடியுமா? நிறுத்தினா, அடுப்பு எரியுமா?

 வர வழியிலே என்னை தடுத்து நிறுத்தினானே போலீஸு, அவனும் பிள்ளகுட்டிக்காரன்தானே, அவன் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியுமா?

 மருந்துகடைல,ஆசுபத்திரியில, ரத்தப் பரிசோதனை பண்ற இடத்துல, வேலை செய்யறவங்கள, நிறுத்த முடியுமா?

 அதெல்லாம் விடுங்க! கொரோனா வந்தவங்க அத்தினி பேருமா, கண்ணை மூடிடறாங்க, நூறுபேரிலே ஒருத்தருதானே!

 சட்டம் பேசறாங்களே, நம்மகிட்ட, அந்த சட்டசபையும், டெல்லியிலே நடக்குதே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.