(Reading time: 10 - 20 minutes)

பாராளுமன்றமோ, ஏதோ, வாயில நுழயமாட்டேங்குது, அதுவும் நடந்துகிட்டுத்தானே இருக்கு! எத்தினிபேரு வராங்க, போறாங்க, அவங்க வியாதிய பரப்பமாட்டாங்களா?

 படிச்சவங்க காதுல, இந்த படிக்காதவ சொல்லு விழாது!

 நான் என்ன சொல்றேன், கவனமா இருப்போம், சுத்தமா இருப்போம், முன்சாக்கிரதயா எல்லாம் செய்வோம், ஆனா, இப்படி திகில் பிடிச்சு, பயந்து நடுங்கி, சாகறதுக்குப் பதிலா, கொரோனாவுக்கே பலியாகிடலாம்!"

 கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, அஞ்சுகம், களுவிய பாத்திரங்களை, பக்கெட்டை வாசப்படியில வச்சிட்டு, தன் சேலைல கையை தொடச்சிக்கிட்டா!

 " இந்தாம்மா! நீ இனிமே, மாசம் பொறந்தபொரவுதானே, வேலைக்கு வரப்போறே!

 இந்தா! உன் மாச சம்பளம், ஐநூறு ரூவா!"

 " வேணாங்க! உங்களுக்கு ஆபீசில எப்ப சம்பளம் தராங்களோ, அப்ப கொடுங்க, இந்தப் பணத்த, உங்களுக்கு இப்ப நெறய செலவாகுமில்ல, அதுக்கு வச்சுக்குங்க!"

 " பித்துக்குளி! எனக்கு கரெக்டா மாசம் பொறந்தவுடனே, என் பேங்க் அகௌண்டிலே சம்பளம் க்ரெடிட் ஆயிடும், கவலப்படாதே! பிடி, பணத்தை! ஜாக்கரதயா, வீடு போய்ச் சேரு!"

 " அம்மாவ விசாரிச்சேன்னு அவங்ககிட்ட சொல்லுங்க, அவங்களயும் புள்ளயையும் கவனமா பார்த்துக்குங்க!"

 " அஞ்சு! நீயும் உடம்ப கவனிச்சுக்கோ" என்று உள்ளிருந்து கனிவுடன் பெண்குரல் கேட்டதும், அஞ்சுகம் சுவர்க்கத்தையே எட்டிவிட்டாள்!

 கண்ணில் நீர் தளும்ப, "வரேம்மா! வரேன்யா!" என்று நகர்ந்தாள்.

 இப்போது, அஞ்சுகத்தின் மனம், போலீஸ்காரனை எப்படி சமாளிப்பது என்று யோசித்தது!

 மடியில் பணம் வேறு இருப்பதால், அவனிடமிருந்து தப்பித்தாகவேண்டிய கட்டாயத்தில் தவித்தாள்!

 அஞ்சுகத்தின் துரதிர்ஷ்டம், அவன் அந்த தெருமுனையிலேயே நின்றுகொண்டிருந்தான்!

 ஆனால், அவளை இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில், சைக்கிளில் ஒருவன் யாருக்கோ கேரியரில் உணவு கொண்டுபோய்க் கொண்டிருந்தவனை மடக்கி, நிறுத்தி, பேசிக்கொண்டிருந்தான்.

 "ஏன்டா! ஊரடங்கு இருக்கறப்ப, தைரியமா, சாப்பாடு எடுத்துக்கிட்டு, என்னை பார்த்தும், நிக்காமயே போறியே, என்ன தைரியம்டா, உனக்கு? இறங்குடா, கீழே!"

 என்று கையிலிருந்த லத்தியினால், வந்தவனின் காலில் ஒரு அடி கொடுத்தான்!

 அடிபட்டவன், போலீஸ்காரன்மீது விழுந்து, இருவரும், கீழே சாய்ந்தபோது, போலீஸ்காரன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.