(Reading time: 9 - 17 minutes)

 " ஓ! உனக்கு இங்கிலீசு தெரியாதா? நீயும் என்னைப்போலன்னு சொன்னேன்........."

 " ஓ! அப்ப, நீயும் நம்ம கேசா?"

 இருவரும் சிரித்தனர்.

" இதப் பாரும்மே! நீயும் நானும் இப்படி டமாஷா பேசிகிட்டு, சந்தோசமா இருக்கோமில்லே, அங்கே பாரு! அவங்க அவங்க மொகத்திலே இருட்டு!"

 " ஏன்யா, அவங்க ஏன் நம்மப்போல, சந்தோசமா இல்லே?"

 " அவங்கள்ளாம், வசதிப்பட்டவங்க! வெளிநாட்டிலிருந்து, வெளியூரிலிருந்து ரயில்லே, ப்ளேன்ல, வந்தவங்க! இங்க மூணுவாரம் இருந்து, கொரோனாவோ, பரோட்டாவோ, அது இல்லேன்னாத்தான், அவங்க வீட்டுக்குப் போகலாம், எப்படிக்கீது?"

 " சரி, அத்தெ விடு, நம்ம கதெக்கு வா! அப்ப, நம்மையும் மூணுவாரம் இங்கே சோறு, தண்ணி குடுத்து வச்சிப்பாங்களா! ஹையா!"

 " சொந்த ஊரு எது?"

 அந்தப்பெண் வாய்விட்டு சிரித்தாள்.

 " ஏம்மே, சிரிக்கிறே? நான் ஒண்ணும் டமாஷ் பண்ணலியே......."

 " ஏன்யா! எனக்கே ஒரு குட்சைகூட சொந்தமில்லே, எனக்கெப்படி ஊரே சொந்தமாவும்?"

 மீண்டும் சிரித்தாள்.

அவனும் சேர்ந்து சிரித்துக் கொண்டே, அவள் தோளில் கைபோட்டான், "நீ டமாஷா பேசறே, கண்ணு!"

 அவள் அவனை முறைத்துப் பார்த்து, "எடுய்யா கையை! என்னையும் என்ன பலான ஆளுன்னு நெனச்சுயா? நான் உழைச்சு சாப்புடறவய்யா! தினக்கூலி!"

 " நான் மட்டும் என்ன, ரைஸ்மில் ஓனரா? நானும் அதே கேசுதான்! கடலூரிலிருந்து வந்திருக்கேன்,......."

 " அட! நான் நெல்லிக்குப்பம்!"

 " குப்பத்து பொம்பளையா?"

 "இத பாரு, பொம்பளை, கிம்பளைன்னு பேசினே, மூஞ்சி பேந்துரும், அஆம்...சொல்லிட்டேன்!"

 "இம்மாம் கோவம் வருதே! பேரை சொன்னா, நான் ஏன் பொம்பள, ஆம்பளன்னு கூப்பிடப்போறேன்?"

 அப்படிக் கேளு! சரோசா! உன் பேரு?"

 "ராசா!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.