(Reading time: 9 - 17 minutes)

 போலீஸ்காரன் அவளுக்கு கை கொடுத்து எழுப்பி, வேனுக்கு அழைத்துச் சென்று, அதில் அவளை ஏற்றினான்.

 யோசித்தான். இவளை எங்கே அழைத்துப் போவது?

 பெண்ணின் துரதிர்ஷ்டம், அவனுக்கு 'அம்மா உணவகம்' நினைவுக்கு வரவில்லை.

 யோசித்துக்கொண்டே, வேனை ஓட்டினான்.

 ஆங்! அவளை கொரோனா சிகிச்சை மையத்தில் விட்டுவிடலாம்!

 பிறகு, அவர்கள் பாடு!

நினைத்தபடியே, அருகிலிருந்த மையத்தில் இறக்கிவிட்டுப் போய்விட்டான்.

 மையத்தில் இருந்தவர்களில் ஒருவர்கூட முகம்கூட தெரியவில்லை! எல்லோரும் தலையிலிருந்து கால்வரை அங்கி அணிந்திருந்தார்கள்.

 அவர்கள் வாயும் கவசத்தால் மூடியிருந்ததால், அவர்கள் பேசுவது, பசியால் காதடைத்திருந்த பெண்ணுக்கு கேட்கவில்லை!

 தன்னை திரும்பிக்கூட பார்க்காமல், வேலை செய்துகொண்டிருந்தவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக, அந்தப் பெண், இருமுறை இருமினாள்!

 அடித்தது யோகம், அவளுக்கு!

 எல்லோர் கவனமும் அவள்பக்கம் திரும்பியது.

 அவளை உடனே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

 டாக்டர் பரிசோதித்துவிட்டு, அவளை குவாரண்டைன் பகுதிக்கு அழைத்துப்போகச் சொன்னார்.

 அருகிலிருந்த 'தனிமைப்படுத்தல் இல்லத்துக்கு' அவளை அழைத்துச் சென்று அங்கே காவலில் வைத்தனர்.

 தாமதமின்றி, அவளுக்கு வயிற்றுக்கு உணவு கிடைத்தது.

 மிகுந்த மனநிறைவுடன், வயிறார சாப்பிட்டுவிட்டு, தன்னை அங்கு கொண்டுவந்து சேர்த்தவர்களை வாழ்த்தினாள்.

 " என்னம்மா! ஊருக்கு புச்சா?"

 " நீதான்யா, புச்சு!எனக்கு! இந்த ஊர் பழச்சுய்யா!"

 " நல்லாத்தானே கீரே, ஏன் இங்கே வந்தே?"

 " ஆங்!..வேலைவெட்டி இல்லே, அதான்......."

 " அட! அப்ப நம்ம கேசு!"

 " அதென்னய்யா கேசு, காசுன்னு?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.