(Reading time: 14 - 28 minutes)

சிறுகதை - காதல் பரிசு - பூர்ணிமா செண்பகமூர்த்தி

பிரபுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. “ஏன் இந்த வினிதா இப்படி பண்றா? அம்மா வீட்டுக்குப் போறேன்னு கேட்டாள். போய் ஒரு மாசம் ஆகப் போகுது. அங்கேயே இருக்கா. என்கிட்டே சரியா பேசறது கூட இல்ல.!வீடு தேடித் போய் நின்னாலும், ரூமுகுள்ள உட்கார்ந்துகிட்டே பதில் சொல்லிட்டு இருக்கா! என்கிட்டே பேசப் பிடிக்காத அளவு அப்படி நான் என்ன தப்புப் பண்ணேன்? அம்மா, அப்பா உன்னை எதாச்சும் சொல்லி நோகடிச்சு அதுக்குக்காக கோச்சுக்கிட்டு அம்மா வீட்டில் இருக்கியான்னு கேட்டாலும் இல்லைன்னு தான் சொல்றா. இன்னிக்கு ரெண்டுல ஒன்னு பார்த்துரணும்! என்று தனக்குள் பேசியவாறே வண்டியைக் கிளப்பிவிட்டு, ‘அம்மா வினிதா வீடு வரைக்கும் போயிட்டு வரேன்! என்று வீட்டுக்குள் இருக்கும் அம்மாவுக்குக் கேட்குமாறு சத்தமாகச் சொல்லிவிட்டு சென்றான்.

வினிதா வீட்டை அடைந்ததும், “வினிதா! வினி! ஏ வினி!” என்று அழைத்தவாறே உள்ளே சென்றான்.

அவன் மாமியார் வந்து, “வாங்க தம்பி, உக்காருங்க! வினிதா கோவிலுக்குப் போயிருக்கா!இப்போ வந்திருவா! இருங்க டீ போட்டுட்டு வர்றேன்!” என்றவாறே உள்ளே சென்றுவிட்டார். சுவற்றில் அவர்களின் திருமணப்புகைப்படம் புத்தம் புதிதாக பிரேம் செய்து மாட்டப்பட்டிருந்ததைப் பார்க்கவும், அவன் நினைவுகள் பின்செல்லத் தொடங்கின. பிரபுவும், வினிதாவும் ஒரே பள்ளியில் வெவ்வேறு பிரிவில் படித்தவர்கள். பள்ளியில் இருக்கும் போது ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. இருவரும் ஒரே ஊரில் வெவ்வேறு இடத்தில் இருந்ததால், அதன் பின்னர் சந்தித்ததாக அவனுக்கு நினைவில் இல்லை. கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு பிரபு ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகத் தற்காலிகப் பணியில் இருக்கையில் தான் அவர்களின் மறுசந்திப்புக்கான அந்த சம்பவம் நடந்தது. உடற்கல்வி வகுப்பில் மயங்கிவிட்ட ஒரு மாணவனைத் தன்னுடன் வண்டியில் இன்னொரு மாணவனின் துணையோடு தாங்கிப்பிடித்துக் கொண்டு பதட்டத்தில் அருகில் இருந்த கிளினிக்குக்குச் சென்றான். அங்கே தான் நர்சாகப் பணிபுரிந்து கொண்டிருந்தாள் வினிதா. அந்த மாணவன் நீரிழப்பால் மயங்கியதை உணர்ந்து உடனடியாகக் குளுகோஸ் ஏற்ற ஏற்பாடு செய்தாள். சிறிது தெம்பு வரவும், அந்த மாணவன் கண்விழித்தான்.

“ரொம்ப தேங்க்ஸ்! சரியான நேரத்துல வந்துட்டேன்! இவனுக்கு என்னமோ ஏதோன்னு நிறைய பயந்துட்டேன். அவங்க அம்மா, அப்பாக்கு என்ன பதில் சொல்றதுன்னு கலக்கம் வேற! இப்போ தான் நிம்மதியாச்சு!” என்றவனிடம்,

“பரவாயில்லை பிரபு! ரொம்ப பொறுப்பான ஆசிரியராகத் தான் இருக்கீங்க!” என்று சொல்லவும் தான், தன் பெயர் அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தான்.

“அடையாளம் தெரியலியா! நான் வினிதா, உங்க கூட ஸ்கூல்ல படிச்சேனே!” என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.