(Reading time: 14 - 28 minutes)

அவன் கைபிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றாள். என்ன சொல்லப் போறாளோ என்ற பயத்துடன் வினிதாவின் அம்மா அவள் அப்பாவை வீட்டுக்கு வரச்சொன்னார். உள்ளே சென்றவுடன், பிரபுவை கட்டியணைத்தவள், காதோரமாய்,மெல்லிய குரலில், “உனக்கு ஞாபகம் இருக்கா பிரபு, இன்னிக்குத் தான் நீ எனக்கு போன் பிரசன்ட் பண்ண நாள், உன் காதலை சொன்ன நாள்!”

அவளை விலக்கியவன், “எனக்கு ஞாபகம் இருக்கு, அதான் உன்னை இன்னிக்குக் கையோட கூட்டிட்டு போலாம்னு வந்தேன்!” என்றான் படபடப்பாக.

“நீ என்னை மட்டுமில்ல இன்னொருத்தரையும் சேர்த்து அழைச்சிட்டு போகணும்!” என்றாள், யார் என்று புருவங்களை உயர்த்தியவனைப் பார்த்தவள், “பிரவின்/பிரவிதா இந்த இரண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தரா இருக்கலாம் என்றாள் குறும்பாக, இருவரின் பெயரையும் சேர்த்து புதுப்பெயரில் ஒருவரைச் செல்லவும், அவள் அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையைச் சொல்கிறாள் என்று புரிந்தது. வினிதா தான் கருவுற்று இருப்பதைச் சொன்னதும் அவன் மகிழ்ச்சி பன்மடங்காகியது.

“இந்த நாளில் உனக்கு ஒரு பரிசு தரணும்னு நினைச்சேன். இப்போ ரெண்டு பரிசாகத் தருகிறேன்!” என்று அவனிடம் நீட்டினாள். “ஒரு சிறு பெட்டியில் ஸ்மார்ட்வாட்ச் இருந்தது. அவன் அதுமாதிரி வாங்க வேண்டும் என்று பிரபு சொல்லிக் கொண்டு இருந்ததை நினைவில் வைத்து வாங்கி இருந்தாள். இன்னொன்று அவள் பிரெக்னன்சி டெஸ்ட் எடுத்த கிட், இரண்டு கோடுகளைக் காட்டியது. விலையுயர்ந்த வாட்சை விட அந்த கிட் தான் அப்போது அவனுக்குப் பெரிய பரிசாக இருந்தது.” அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவளின் அப்பா வீட்டுக்கு வந்துவிட, அவர்கள் இருவரும் அறையில் இருந்து வெளியே வந்தனர். இருவரும் சிரித்த முகமாய் வந்ததால், அம்மா, அப்பாவிற்கு நிம்மதி. வினிதா கருவுற்று இருப்பதைத் தெரிந்து அவளின் அம்மாவும் அவளைக் கட்டியணைத்து முத்தமிட்ட, அப்பாவிற்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. பழம், இனிப்புகள் என அத்தனையும் அவளுக்கு வைத்துக் கொடுத்து, பிரபுவின் வீட்டுக்கு அனுப்பினர். வண்டியில் செல்லும் போது பிரபு  “வினி! ஏண்டி இப்படி இத்தனை நாள் வரமாட்டேன்னு அடம்புடிச்ச?” என்றான்.

“உனக்கொரு வாட்ச் கொடுத்தேனே!”

ஆமா நானும் கேட்கணும் நினைச்சேன், அது இந்தியால கிடைக்காதே எப்படி வாங்கின?

சிங்கப்பூர்ல நர்ஸ் வேலை பார்க்கிற என் பிரெண்ட் கிட்ட சொல்லி வாங்கிட்டு வரசொன்னேன்.

அதை வாங்கிறதுக்குத் தான் இங்கேயே இருந்தியா?

வாட்சை வாங்கிறதுக்கு அம்மா வீட்ல இருக்கல, வாட்சை வாங்கினதால்தான் அம்மா வீட்லயே இருந்திட்டேன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.