(Reading time: 14 - 28 minutes)

பேசாமல் இருக்க முடியல எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். அப்புறம் முக்கியமான விஷயம், கல்யாணத்துக்கு அப்புறமும் நான் இதே நர்ஸ் வேலைக்குப் போவேன். நீ என்னைத் தடுக்கக் கூடாது!” என்றாள்.

கல்யாணம் என்ற வார்த்தை காதில் விழவும், அவன் இதயம் கூட்டைவிட்டே வெளியில் வந்து துடிப்பதுபோல் சத்தம் அவனுக்குக் காதில் கேட்டது. “சரி! வைக்கிறேன்!” என்று காலை கட் செய்துவிட்டாள்.

மூன்று வருடங்கள், போன் பேச்சிலும், சில சந்திப்புகளிலும் காதல் வளர்த்தவர்களை, வினிதா வீட்டில் கல்யாணப் பேச்சை எடுப்பதாகத் தெரியவும், பிரபு தன் அம்மா, அப்பாவிடம் சொல்லி அழைத்து வந்துவிட்டான். பிரபுவின் அம்மா,அப்பாவிற்கு அவன் ஒரே பிள்ளை, அவன் விருப்பம் தான் அவர்கள் விருப்பம்.வினிதாவின் வீட்டிலும் அதே மாதிரி தான்.  பிரபு, வினிதா இருவரின் பெற்றோரும் சாதி மறுப்பாளர்கள் என்பதால், அவர்களின் கல்யாணம் எளிதாகிப் போனது. எந்த வில்லனும் வராமலே, சுபம் என்று அவர்களின் திருமணம் நடந்தது.

இருவரும் மகிழ்ச்சியாக திருமண வாழ்வைத் தொடங்கி இரு மாதங்கள் ஆகின்றன. ஆனால் கடந்த இரு வாரமாகத் தான் இந்த பிரச்சினை. காரணம் தெரியாத பிரிவும், விலகலும். வினிதா அம்மா வீட்டில் இருந்து கொண்டு வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறாள். பிரபுவின் அம்மா, சத்தியமாக மருமகளை தவறாகவோ வருந்துமாறோ ஒரு வார்த்தையும் தான் கூறவில்லை என்று சொல்லிவிட்டார்கள். பிரபுவுக்கு அவளை எப்படியாவது அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்க, அவன் சிந்தனையின் ஓட்டம் ஒரு முடிவில் வந்து நின்றது.

“போட்டோ நல்லா இருக்கா மாப்பிள்ளை, என்றவாறே, தட்டில் கேசரியும், டீ கப்பையும் கொண்டு வைத்தார் வினிதா அம்மா. இன்னிக்குத் தான் மாப்பிள்ளை, சிரிச்ச முகமா இருக்கா! இத்தனை நாளா தனியாவே தான் ரூமுக்குள்ளே கிடந்தா. வெளியே வரவே மாட்டா. இந்த கல்யாணத்துக்காக ஏதோ வேண்டுதலா, இல்லை எதையும் பார்த்து பயந்தாளான்னும்  தெரியல! அவ துணிமணியைக் கூட என்னைத் தொடவிடல, அவளே தான் துவைச்சா. சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தா, சாப்பிட்டு தட்டு, டம்ளர் எல்லாம்  அவளே கழுவிட்டு  வெயில்ல காய வச்சிருவா. நானும், இவங்கப்பாவும் கூட அவ முகத்தைப் பார்த்து நாளாச்சு. அம்மா என்கிட்டே கூட ஏன்னும் சொல்ல மாட்டேங்கறா. கேட்டுப் பார்த்து சலிச்சுப் போச்சு. அவளா சொல்லுவான்னு தான் விட்டுட்டோம். இன்னிக்குத் தான் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போயிருக்கா!”

அவர் பேசி முடிக்கும் போது, வினிதா கேட்டைத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்டது. “வா பிரபு! என்றவள், திருநீரை எடுத்து அவன் நெற்றியில் இட்டவள், அம்மாவிடம் பூசைக் கூடையைக் கொடுத்தாள்!”

“அம்மா! அப்பாக்கு போன் பண்ணிட்டு வீட்டுக்கு வர சொல்லுங்க! நான் பிரபுகிட்ட தனியா பேசனும்” என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.