(Reading time: 14 - 28 minutes)

என்ன சொல்ற? புரியலேயே! என்றான் பிரபு.

சிங்கப்பூர்ல இருந்து வந்த ப்ரெண்ட்கிட்ட வாட்ச் வாங்கிட்டு வரச்சொன்னேன். அவளை மீட் பண்ணி வாங்கிட்டேன். ஆனால் இரண்டு நாள்லேயே அவளை லீவ் கேன்சல் பண்ணிட்டுத் திரும்ப  வரச்  சொல்லிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அங்கே பன்றிக் காய்ச்சல் பரவுதுன்னு, அவளை அங்கே ஹாஸ்பிட்டல்ல ட்யூட்டிக்குக் கூப்பிட்டுட்டாங்க போல, அவங்க வீட்ல இருந்தவங்களையும், அவளைப் பார்க்க வந்தவங்களையும், எதுக்கும் சேப்டிக்கு கொஞ்ச நாள் ரொம்ப பொதுவெளியில் புழங்காம இருக்க சொல்லியிருந்தா, அவளுக்கே ஏதேனும் தொற்று இருந்திருந்தால், அவள் அறியாமல், இங்கே எல்லாருக்கும் பரவிடக்கூடாதுன்னு நல்ல எண்ணத்தில் தான். யாரையும் பயப்படுத்த வேண்டாம்னு தான் நானும் அப்படியே இருந்தேன். அப்படித் தொற்று இருந்தால் இரண்டு வாரத்துக்குள்ள அறிகுறிகள் காட்டும். கடவுள் அருளால் யாருக்கும் அந்த தொற்று இங்கே வரவேயில்ல. அதான் கடவுளுக்கு நன்றி சொல்ல கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டேன், கோவிலுக்குப் போறதுக்கு முன்னாடியே நாள் தள்ளிப் போயிருந்தது நினைவுக்கு வர, நான் என் கிட்ட இருந்த கிட்ல டெஸ்ட் எடுத்துப் பார்த்தேன். கோவிலுக்குப் போயிட்டு வந்து உனக்குத் தான் போன் பண்ணனும்னு இருந்தேன். வந்து பார்த்தால் நீயே வீட்டில் இருந்த! இதோ எல்லாத்தையும் சொல்லிட்டு உன்கூட கிளம்பிட்டேன் என்று அவனை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

இந்த பதினாலு நாள் உன்னைப் பார்க்காமல் இருந்தது எப்படி இருந்துச்சு தெரியுமா, அதற்கு ஈடா, இன்னும் பதினாலு நாள் வேலைக்கு லீவ் போட்டு, உன்னையே பார்த்துட்டு இருக்கப் போறேன் எனவும், மாநிறமான அவள் கன்னங்களில் ரத்தம் பாய்வது அவன் வண்டியில் முன் கண்ணாடியில் தெரிந்தது.

வீடு வந்து சேரவும், பிரபுவின் அம்மா அப்பாவிற்கும் மகிழ்ச்சிதான்! பிரசவம் தாய் வீட்டில் என்றாலும் அவளைக் காணச் செல்லாமல் ஒரு நாள் கூட பிரபு இருந்ததில்லை.

வினிதாவும் அரசு மருத்துவமனையில் நர்ஸ் பணி பெற்றுவிட, இருவரின் வேலையிடமும் சற்று அருகருகே அமைந்துவிட்டது, வினிதாவின் முகம் பார்க்காமல் ஒரு நாளும் பிரபுவிற்கு செல்லாது. அவன் மனதில் ஆழப்பதிந்த முகம் அவளின் முகம் என்று அவனுக்குப் புரிந்தது. பள்ளியில் பயில்கையில் ஒருவருக்கு ஒருவர் பேசாவிட்டாலும் தினமும் தன்னையறியாமல் அவளைக் கவனித்து இருப்போம் என்றே தோன்றியது. பிறந்து பள்ளி சேரும் முன்னரும், கல்லூரியில் பயின்ற காலமும் தான் தன் வாழ்வில் அவள் முகம் காணாத வீணான நாட்கள் என்றே அவனுக்குத் தோன்றும். வார்த்தைகளில் விவரிக்க இயலாத அவ்வளவு எல்லையில்லா அன்பும் காதலும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.