(Reading time: 9 - 17 minutes)

 " என்ன கிண்டலா? நிசம் பேரை சொல்லய்யா, கூப்பிட வாட்டமா இருக்கும்ல....!"

 " சரோசா! எங்கம்மா வயத்திலேந்து பாப்பாவா நான் கீழே விழுந்தப்ப, எங்காத்தா என்னை 'என் ராசா'ன்னு கொஞ்சினாங்களாம், அந்தப் பேரு அப்படியே நின்னுடிச்சி!"

 "ஆமாம், ராசான்னு பேரை வச்சிகிட்டு, ஏன் இப்படி சட்டி தூக்கறே?"

 " சரோசா! பெத்தவங்களுக்கு பிள்ளைங்க, ராசாவா ஆகணுங்கற ஆசையை, பேரிலேயாவது பாக்க நினக்கறாங்க, அத்த வுடு, ஆமாம், சரோசா! இப்படி ஒத்தயாவா, ஊரைவிட்டு வந்தே? கூட யாரும் வல்லே?"

 " கூட வர மனுசங்க இருந்தா, இங்க எடுக்கற பிச்சையை அங்கயே எடுக்கமாட்டேனா? எல்லாம் அவங்க வழியை தேடிக்கிட்டு பூட்டாங்க......"

 " அளுவாதே, சரோசா! அதுலயும் நீ நம்ம கேசுதான்! என்னயும் 'எங்கயாவது போய் பொழச்சுக்கடான்னு பூட்டாங்க!"

 " ராசா!....."

 " இரு, இரு, இன்னொருக்கா, கூப்டு!..."

 " ராசா! ராசா!....."

 " சரோசா! நீ என்பேரை சொல்றப்போ, சில்லுனு கீது........."

 " என்ன, லவ்ஸா! பிச்சிப்பிடுவேன் பிச்சி! ஒளுங்குமருவாதியா நடந்துக்க, ஆமாம், சொல்லிப்பூட்டேன்....."

 " நீ கோவிக்கறாப்பல பேசறயாக் காண்டி, கண்ணு சிரிக்குதே! சரோசா! நீ ரோசாவேதான்! என்ன அளகு!"

 " ஏன்யா, வயறு காயறபோதே, லவ்ஸ் விடறியே, மூணு வேள சோறு துண்ணா, என்ன ஆவுறது?"

 "ராசாவும் ராணியுமா கையை கோர்த்துக்கிட்டு, பிருந்தாவனத்துல நடப்போம்ல......."

 " தரைக்கு வாய்யா, ஆகாசத்துலயே, முதக்காத!"

 "சரோசா! அவுங்கள்ளாம், மொவத்த கவுத்துகிட்டு, அளுவுறப்ப, நீயும் நானும் சந்தோசமா இருக்கம்மே, ஏன் தெரியுமா?"

 "வ வுத்துல சோறு கடக்குதுல்ல, வேற ஒண்ணும் வேணாம், நமக்கு! அதுனால, டமாஷா பேசி சிரிக்கறோம்,

பாவம்யா அவுங்க! அவுகளுக்கு மனுசங்க வேணும்யா! அதுனால தானே, வெளிநாட்ல இருந்து ஆசை ஆசையா, இங்க வந்தாங்க! ஆனா, அவுக மனுசங்கள, பார்க்கக்கூட முடியாம, இப்டி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.