(Reading time: 8 - 16 minutes)

 " குடும்பத் தலைவனா,

கொடுக்கிற மரியாதையை

ஏற்றுக்கிட்டு, சொன்ன வேலையை செய்து முடிங்க!"

 மாதவன் சிந்தனையில் மூழ்கினார்.

 கண்ணன், சாப்பாட்டு

நேரத்துக்கு, வீடு திரும்பினான்.

 " மாம்! மீல்ஸ் ரெடியா?"

 " இது என்ன ஓட்டலா? துரை வருவாரு,

அவருக்கு மீல்ஸ் ரெடியா

வைச்சிருக்கணும்? போங்க!

அதையும் நீங்களே அரேஞ்ச்

பண்ணிக்குங்க!"

 " மாம்! மை ஸ்வீட் மாம்! உன் கைப்பக்குவம் இந்த உலகத்திலே ஒருத்தனுக்கும் வராது! யு ஆர்

ஆன் எக்ஸ்பர்ட் குக்!"

 " உனக்கு வாய்க்கு ருசியா செய்துபோட, அம்மா வேணும்! உன்னை படிக்கவைக்க, அப்பா வேணும், உன் மேரேஜ் மட்டும்

நீயேஅரேஞ்ச் பண்ணிப்பியா? எங்களை

என்ன கூலிக்கு வேலை செய்யறவங்கன்னு நினைக்கிறியா?"

 " மாம்! இந்த லாஜிக்

நல்லாயிருக்கு! இதையே

கொஞ்சம் எக்ஸ்டெண்ட்

பண்ணிப் பார்க்கலாமா?"

 " மிரட்டிறியா? இது ஒரு சவால்! நாங்க அரேஞ்ச்

பண்ற கல்யாணத்துக்கு நீ

சம்மதிக்கணும், இல்லேன்னா, நீ யாரோ, நாங்க யாரோ! இப்பவே டிசைட் பண்ணு!"

 " மாம்! டிசிஷன் எடுக்கணும்னா, ரெண்டு பக்கமும் தெரிஞ்சிண்டுதானே

எடுக்கணும்! அப்பா! நியாயம்தானே?"

 " டார்லிங்! அவன் சொல்றது, சரிதானே!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.