கைக்குள்ளே போட்டுக்கிட்டு,
என்னை அடக்கி ஆள்றயோ, எப்படி என் வாயை அடைச்சிட்டு, எங்கப்பா, அம்மாவை, ஒதுக்கிவைச்சியோ, அப்படித்
தான் வரப்போற மருமகளும்
இருக்கணுங்கறான்."
" நீங்க உளராதீங்க! என் ராசா, அப்படி ஒருநாளும்
நினைக்கவே மாட்டான். வரப்
போறவ, அப்படி ஏதாவது தப்பா செய்தா, அவளை டைவோர்ஸ் பண்ணிடுவான், இல்லையாடா, ராசா?"
" அப்போ, மாம்! நீ என்ன சொல்றே, அப்பா உன்னை டைவோர்ஸ் பண்ணிடலாம்னு ஒத்துக்கிறியா?உன்னைமாதிரி, எல்லா குணங்களிலும் இல்லாம, சில
விஷயங்களிலே மட்டும், உன்னைப்போல இருக்கணுங்கறியா, எது வேணும்?"
மீனா, கோபித்துக்கொண்டு, எழுந்து
போய், கைகழுவினாள்! தன் அறைக்குச் சென்று கதவை
தாளிட்டுக்கொண்டு கதறி
அழுதாள்.
அப்பாவும் பிள்ளையுமா தன் தவறைச்
சுட்டிக்காட்டி தன்னை கூண்டிலே நிற்கவைத்துவிட்டதை உணர்ந்தாள்.
தான் செய்ததுபோலவே, தன் மருமகளும் செய்துவிட்டால்?
தங்களுக்கு இருப்பது ஒரே பிள்ளை! வயதான காலத்தில்
தங்களை ஒதுக்கிவைத்துவிட்டால்....?
வெளியே, தந்தையும் மகனும் வெற்றிக்
களிப்புடன், காத்திருந்தனர்.
" அப்பா! அம்மா வெளியே வர சத்தம் கேட்குது, ஸ்டார்ட்!"
" கண்ணா! இந்த கொரோனா பாதிப்பிலே எண்பது வயதைக் கடந்த என்னை பெற்ற இருவரும், அந்த கிராமத்திலே தனியா
எப்படியெல்லாம் தவிக்கிறாங்களோன்னு நினைச்சா, துக்கம் தொண்டையை அடைக்குதுடா!........."
" இப்பவே கிளம்பிப்போய், அவங்களை