சொல்லணும்...”
“ஹார்ட் ஸ்பெஷல்லிஸ்ட், ஆர்த்தோ ஸ்பெஷல்லிஸ்ட்ன்னு இருக்கறா மாதிரி இப்போ இதுக்கும் ஸ்பெஷல்லிஸ்ட் வந்தாச்சா... நான் கேள்விப்பட்டதே இல்லையே மாமி... டாக்டர் பேர் என்ன....”
“ஏண்டி க்ருஹா.... டிவில சீரியல் தவிர வேற ஒண்ணும் நீ பார்க்கிறதில்லையா.... காலங்கார்த்தால எல்லா சேனல்லயும் சிவகடாட்சமா ஒருத்தர் உக்கார்ந்துண்டு கும்ப ராசி நேயர்களே, மேஷ ராசி நேயர்களேன்னு கூவி கூவி கூப்பிட்டு தினப்பலன், ராசி பலன்ன ஆரம்பிச்சு பல்லி விழும் பலன் வரைக்கும் சொல்லுவாரே, பார்த்ததில்லையா...”
“எங்க மாமி, கார்த்தால எழுந்தா கிச்சன்ல அல்லாடவே நேக்கு சரியா இருக்கு... இதுல எங்க இருந்து டிவி பார்க்க...”
“வெயில் காலமானா சூட்டுக்கு இதமா இருக்கும், மழைக்காலத்துல சீக்கிரம் ஜீரணமாகும்ன்னு வருஷம் முழுக்க கார்த்தால ஓட்ஸ்ஸும், மத்தியானத்துக்கு தயிர் சாதமும்தானே வரதனுக்கு கொடுக்கற... இதுக்கு என்ன அல்லாட்டம் வேண்டி இருக்கு...”
விட்டால் மாமி தன்னை டோட்டல் டாமேஜ் செய்துவிடுவாள் என்று க்ருஹா, “மாமி உங்களுக்கு எப்பவுமே கிண்டல்தான்.. மொதல்ல இதுக்கு என்ன பரிகாரம்ன்னு சொல்லுங்கோ...”, பேச்சை மாற்றினாள்.
“நேக்கும் அத்தனை விஷயம் தெரியாதுடி... என்னோட சிநேகிதி ஒருத்தி இருக்கா... அவளுக்கு எதுக்கு எந்தப் பரிகாரம் பண்ணனும்ன்னு கரெக்ட்டா தெரியும்... அவளை கேக்கறேன் இரு...”
சுப்பு மாமி தன் தோழிக்கு அழைத்து க்ருஹாவின் பிரச்சனையை கூறி அதற்கு எந்த விதமான பரிகாரம் செய்யலாம் என்று கேட்டார்.... அந்த மாமியும் வளைத்து வளைத்து அரை மணி நேரம் ஆலோசனை வழங்கினார்...
“க்ருஹா நான் அந்த மாமிட்ட எல்லாம் கேட்டுட்டேன்டி... உனக்கு மல்டிபிள் ப்ரோப்ளம் இருக்கறதால வெறும் கிரக தோஷம் மட்டும் பார்க்கறவா போறாதாம்.... அதனால அவ விஜாரிச்சுட்டு எனக்குத் திரும்ப கூப்பிடறேன்னு சொல்லி இருக்கா...”
“ஏன் மாமி கேரளால மாந்த்ரீகம் எல்லாம் பண்ணுவாளே, பேருக்கூட ஏதோ நூல்திரி மாதிரியே வரும்.... சட்டுன்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்கறது.... அவாளை கூப்பிடலாமா... உங்க சிநேகிதிக்கிட்ட கேளுங்கோளேன்.... அவா ஏதோ சோழி உருட்டி பிரசன்னாவை கூப்பிட்டு எடுக்க சொல்லி என்ன பிரச்சனைன்னு கரெக்ட்டா சொல்லிடுவாளாம்....”
“க்ருஹா ஏண்டி இப்படி உளர்ற.... அவாப்பேர் நம்பூதிரி.... பிரசன்னாவை கூப்பிட்டு பார்க்க மாட்டா... அதுக்கு பேர் பிரசன்னம் பார்க்கறது... அதெல்லாம் சரியா வராதுடி... மொதல்ல நாம உள்ளூர் ஜோசியரை கூப்பிடலாம்... அப்பறமா ஸ்டேட் விட்டு ஸ்டேட் போலாம்...”