(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

  

”அட கொடு அது என்னென்னு நான் தெரிஞ்சிக்க கூடாதா”

  

“இல்லைங்க அது உங்களுக்குப் பிடிக்காது”

  

”பிடிக்காதா அப்படி என்ன சங்கதியிருக்கு அதுல, கொடு நான் பார்க்கிறேன்” என சொல்லி அவரிடம் இருந்து கடிதத்தை பறிக்க முயல, அதை தடுக்க கமலா முயல இருவரும் சிறுபிள்ளைகள் போல விளையாடுவதை பார்த்தபடி வந்தான் 25 வயது இளைஞன் ராபர்ட்

  

”யோவ் பெரிசு, வயசான காலத்தில பொண்டாட்டியோட லவ்ஸ் பண்றியா” என கிண்டலாகக் கேட்க கதிரேசனோ சட்டென நின்று ராபர்ட்டை திரும்பிப் பார்த்து

  

”எலேய் ராபர்ட்டு எகத்தாளமா பேசறியோ, எனக்கென்னடா வயசாச்சி, இப்பவும் கரும்பை கையாலயே ரெண்டா உடைப்பேன் தெரிஞ்சிக்கோ” என சொல்லியவர் தனது மீசையை நீவிவிட அதைக்கண்ட ராபர்ட்டோ

  

”அதுசரி நீ வீரன்தான்யா விடு விடு ஆமா என்னத்துக்கு கமலாம்மா கிட்ட வம்பு பண்ற” என கேட்டுவிட்டு கமலாவிடம்

  

”கமலாம்மா என்ன பிரச்சனை, இந்தாளு வம்பு பண்றாரே என்கிட்ட சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்“

  

”ஆமா நீ பெரிய துரை, பிரச்சனையை தீர்த்து வைச்சிடுவீங்களோ, பொழுதுக்கும் எந்த வேலைக்கும் போகாம வெட்டியா ஊர் சுத்தற பயலுக்கு பேச்சைப்பாரு பேச்சை, போலே இங்கிருந்து” என கதிரேசன் விரட்ட ராபர்ட்டோ

  

”முடியாது ஒரு விசயம் கேள்விப்பட்டேன், அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிக்க நான் வந்தேன்”

  

”என்னத்தடா விசயம்“

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.