”ஆமாம்ங்க கிறிஸ்துமஸ் பண்டிகையை நம்மளோட கொண்டாடறதா லெட்டர்ல எழுதியிருக்கானே”
”அப்ப பண்டிகைக்கு ஏத்த மாதிரி நம்ம வீட்டையும் மாத்தனும்ல”
”அதுக்கென்னங்க வீட்டை கழுவி மெழுகி தோரணம் எல்லாம் கட்டி படையல் போட்டு சாமி கும்பிடலாம்“
”நீ எந்த சாமியை கும்பிடுவ”
”அது அவங்க சாமியைதான்”
”ஆமா அவங்க சாமிக்கு படையல் போடுவியோ, ராபர்ட் என்னெல்லாம் செய்தான்னு நான் பார்த்தேன், அப்படி செஞ்சாதானே நல்லாயிருக்கும் எதையும் முறைப்படி செய்யனும் கமலா”
”சரிங்க இப்ப என்ன படையலுக்கு பதிலா சாக்லேட் வாங்கி வைச்சிடலாம் ஆனா, அந்த மரத்துக்கு எங்க போறது அம்புட்டு விலையா சொல்றீங்களே”
”பேரனோட சந்தோஷத்துக்காக பணத்தை செலவு செய்றது தப்பில்லையே”
”செய்யலாம் ஆனா இருக்கற பணத்தை மரத்துக்கே செலவு பண்ணிட்டா, பரிசுபொருளு, சாக்லேட்டு அப்புறம் அவர் பேர் என்ன சொன்னீங்க சன்டேயா”
”சன்டே இல்லை சான்டா”
”அவர் வேற வருவாரு, அவருக்கு வேற சமைச்சி வைக்கனும்ல“
”அவரு சாக்லேட்தான் சாப்பிடுவாராம்”
”சரிங்க பலகாரமும் சுட்டு வைச்சிருக்கேன், வந்தவரு இனிப்பை சாப்பிட்டு அப்படியே முறுக்கு