சாப்பிட்டு போகட்டும், தப்பில்லை தப்பில்லை”
”சரி கமலா அந்த மரத்துக்கு என்ன செய்றது”
”அதாங்க யோசனையா இருக்கு” என பலமாக கமலா யோசிக்க அந்நேரம் காற்று வீச அவர்கள் இருந்த இடத்திற்கு நிழலும் காற்றும் தருவதே அங்கு ஓங்கி வளர்ந்த அசோக மரம்தான், அதை இருவருமே பார்த்தார்கள்
”கமலா கமலா இந்த மரத்தை பாரேன்“
”இதுக்கென்ன நல்லாதான் இருக்கு நிழலும் காத்தும் தருது”
”அதுக்கில்லை கமலா இதே போல மரத்தைதான் ராபர்ட்டு வீட்ல வைச்சிருந்தான்”
“இதையா”
”ஆமாம் கமலா பார்க்க இது போலதான் இருந்தது”
”இதை அடிக்கடி வெட்டனும்னு சொல்லிக்கிட்டு இருப்பீங்க ஆனா, வெட்ட முடியாம போயிடும் இப்ப இது நமக்கு உதவுது பாருங்களேன்”
”எப்படியோ கருப்பு சாமி புண்ணியத்தில மரம் கிடைச்சிடுச்சி”
”அதென்ன கருப்பு சாமி கிறிஸ்து சாமின்னு சொல்லுங்க”
”ஆமாம் ஆமாம் அவருக்கான பண்டிகையாச்சே அப்படித்தான் சொல்லனும் ஆனா, கமலா ராபர்ட்டு அந்த மரத்தில ஏகப்பட்ட பெல் கட்டியிருந்தான், சின்ன சின்னதா பொம்மைங்க, பரிசு பொருள் எல்லாம் மாட்டியிருந்தான், அதுவுமில்லாம கலர் கலரா பல்புகள் வேற கட்டி அழகுபடுத்தியிருந்தான்”
”அதுக்கென்ன மரம்தான் இருக்குல்ல, சீரியல் செட் பல்பு கொண்டு வந்து மரத்தைச் சுத்தி