கட்டிவிடுங்க”
“பெல்லுக்கு எங்க போறது”
“அது என்னங்க பெரிசா விலையா இருக்கப் போகுது, விளையாட்டு சாமான் விக்கற கடையில கேட்டா தருவாங்க அப்படியே அங்கயே பொம்மைகளை வாங்கிடுங்க”
”அப்ப பரிசு பொருள்”
”பரிசு பொருளுக்கு எங்க போறது என்ன செய்றது ஆஆஆ ஒரு யோசனைங்க”
”என்னது”
”கொலுவுக்காக பொம்மை வாங்கி வைச்சிருப்போம்ல”
”ஆமாம்”
”5 வருஷமா கொலு கொண்டாடல, அந்த பொம்மைகளை சுத்தம் பண்ணி கலர் பூசி புதுசாக்கி டப்பால அடைச்சி பரிசு பொருளா வைச்சிடலாம்ங்க”
”ஆஆஆ சே சே எல்லாம் புதுசா இருக்கனும்டி, பரிசுக்கென்ன பரிசு நானே செய்றேன்”
”நீங்களா”
”ஆமாம் விலையான பரிசைதான் வைக்கனும்னு யாரும் சொல்லலையே, நம்மால முடிஞ்சதை வைப்போம், எனக்கு மரபொம்மை செய்றது தெரியும் பேசாம அதை செய்றேன்” என சொல்ல அவரும் சரியென்றார்
”பண்டிகை வேற கிட்ட வருது எல்லா வேலைகளையும் முடிக்கனும் பேரன் வந்து பார்த்தா சந்தோஷப்படுவான்”