”அதுக்கென்ன இப்பவே ஆரம்பிச்சிடறேன்” என சொல்லி கமலா உடனே வேலையில் இறங்க கதிரேசனும் ஓங்கி உயரமாக வளர்ந்திருந்த மரத்தை மகிழ்ச்சியாகப் பார்த்துவிட்டு
”உன்னை பலமுறை வெட்ட நினைச்சேன் ஆனா முடியலை இப்ப நீ எனக்கு உதவற இரு உன்னை நான் அழகாக்கறேன்” என ஒரு முடிவுடன் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினார்.
கதிரேசனும் கமலாவும் பரபரப்பாக இருந்தார்கள். ஆளுக்கு ஒரு வேலைகளை பகிர்ந்துக் கொண்டு செய்தார்கள். கதிரேசனும் தான் சொன்னது போலவே மரபொம்மைகளைச் செய்தார், மரத்தை குளிப்பாட்டினார், அதற்கு பொம்மைகளையும் பெல்களையும் கடையிலிருந்து வாங்கிவந்து மாட்டி அழகு பார்த்தார். கமலாவும் வீட்டை அழகுப்படுத்தினார், தோரணங்கள் கட்டினார். கதிரேசன் மரத்தை அழகு செய்கிறேன் என மேலும் கீழும் ஏறி இறங்கினார்.
நாளை கிறிஸ்துமஸ் என இருக்க அந்நேரம் அவசரமாக கடைவீதிக்குச் சென்றார். கலர் கலர் சிரியல் பல்புக்களை வாங்கி மரத்தில் அலங்காரமாக வைக்க வேண்டும் என்பதற்காக செல்ல அங்கு ராபரட்டோ தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பார்ப்பவர்களிடம் எல்லாம் ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ் என வாழ்த்து சொலலிக் கொண்டே கிறிஸ்துமஸ் பாடலைப் பாடினான்
Come on ring those bells
Light the Christmas tree
Jesus, we remember it's Your birthday
Everybody likes to take a holiday
Everybody likes to take a rest
Spending time together with the family