(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

  

”வா வா நானே பத்திரமா கொண்டு போய் விடறேன் வா“ என அவனின் கையை பிடித்துக் கொண்டு நடக்கவைத்தே அழைத்துச் செல்ல ராபர்ட்டுக்கு ஒரு பக்கம் பயமிருந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவரிடம் இயல்பாகப் பேசினான்

  

”ஆமா இப்ப என்னத்துக்கு இவ்ளோ கோபம் வருது உனக்கு, வயசாச்சிடுச்சில்ல இன்னும் என்னத்த கௌரவம் பார்த்துக்கிட்டு, நீ செத்தா கொள்ளி போட வாரிசு தேவைதானே” என கேட்க அவரோ அவனை நன்றாக முறைக்க அதில் ராபர்ட்டோ

  

”இப்ப எதுக்கு என்னை முறைக்கற, என்னை முறைச்சி ஒண்ணும் ஆகப்போறதில்லை, உன் புள்ளை கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்கு வராப்லயாம், வந்தா 10 நாள் இருப்பாராம் லெட்டர்ல இருக்கு” என சொல்ல கதிரேசன் நடப்பதை உடனே நிறுத்திவிட்டு ராபர்ட்டை பார்த்து

  

”என்னல்ல சொன்ன”

  

”ஒண்ணும் சொல்லலையே லெட்டர்ல இருந்ததைச் சொன்னேன்”

  

”டேய் ஒழுங்கா அந்த லெட்டர்ல என்ன இருந்ததுன்னு சொல்லு”

  

”அதான் அப்பவே சொன்னேனே, ஊருக்கு வராப்லயாம் வர்றப்ப குடும்பமா வராராம்”

  

”குடும்பம்னா”

  

”ம்க்கும் புதுசாவே கேளு, எல்லாம் தெரிஞ்சிருந்தும் எதுவும் தெரியாத மாதிரி பேச உன்னாலதான்யா முடியும்“

  

”டேய் ஒழுங்கா சொல்லு, இல்லை தோலை உரிச்சிடுவேன்“

  

“ஆமா என்னையே மிரட்டு, உன் புள்ளையை செல்லம் கொட்டி வளர்த்த, அவரும் நல்லா படிச்சி வேலைக்கு போய் கூட வேலை செய்ற பொண்ணை காதலிச்சி கட்டிக்கிட்டாரு, இப்ப

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.