(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

”அதெல்லாம் வேணாம் ஒழுங்கா அந்த லெட்டரைக் கொடு”

  

”இல்லைங்க வேணாம்ங்க”

  

”கொடுக்க போறியா இல்லையா” என சத்தம் போட வேறுவழியில்லாமல் கமலா அந்த லெட்டரை எடுத்து நீட்ட அதை கதிரேசன் வாங்கிப் பார்த்தார்

  

”யார்கிட்டயிருந்து லெட்டர் வந்திருக்கு”

  

”அதுவா அது என் தூரத்து சினேகிதிகிட்டேயிருந்து வந்திருக்கு”

  

”ரொம்ப தூரமோ, பெரிசா இருக்கு லெட்டரு”

  

”ஆமாம்ங்க கொடுங்க”

  

”என்னவாம் உன் சினேகிதிக்கு“

  

”அதுவா அது சும்மா எப்படியிருக்கேன்னு கேட்டு எழுதியிருந்தா“

  

”எப்படியிருக்கன்னு கேட்கறதுக்கா இம்புட்டு பெரிய லெட்டரு” என சந்தேகமாக கேட்ட கதிரேசன் தனக்கும் படிக்கத் தெரியாத காரணத்தினால் சட்டென அந்த லெட்டரை அருகில் இருந்த ராபர்ட்டிடம் தந்து

  

”இந்தா இதை படி, யார் அனுப்பியிருக்கா பாரு” என சொல்ல அவனும் உற்சாகமாக அதை வாங்கிப் பார்த்தான். கமலாவோ பதட்டமாக இருந்தார். மனைவியின் பதட்டத்தை பார்த்தபடியே பலமாக யோசித்தார்

  

”எதுக்கு இவ்ளோ பதட்டமா இருக்கா, ஏதோ தப்பாயிருக்கே யார் அனுப்பியிருப்பா லெட்டரை” என தனக்குள் கேட்டுக் கொண்டார்.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.