(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

ராபர்ட்டும் அந்த கடிதத்தை பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டு மகிழ்ந்தான். அவனது மகிழ்ச்சியைக் கண்ட கதிரேசனோ

  

”என்னல்ல சிரிப்பு, யார் லெட்டர் போட்டிருக்கா என்ன விசயம்” என கேட்க ராபர்ட் உடனே கமலாவைப் பார்க்க கமலாவோ வேண்டாம் என்பது போல் தலையாட்ட கதிரேசன் அதை பார்த்துவிட்டார்

  

”கமலா” என அதட்ட அதில் அவர் அடங்கிப் போனார்.

  

”டேய் ராபர்ட்டு யார்ல லெட்டர் அனுப்பினது”

  

”வேற யாரு எல்லாம் உன் புள்ளைதான்”

  

என சொன்னதும் கதிரேசனின் உடல் நடுங்கியது, கோபம் சட்டென வந்துவிட்டது. அவரின் கோபத்தைக் கண்டதும் கமலாவோ

  

”வேணாம்ங்க இன்னும் எத்தனை வருஷம்தான் கோபமா இருப்பீங்க, ஆயிரம்னாலும் அவன் நம்ம புள்ளைங்க“

  

”கமலா போதும்” என சத்தம் போட அதில் கமலாவும் அமைதியாகி வீட்டிற்குள் சென்றுவிட்டார். ராபர்ட்டும் நிலைமை கலவரம் ஆனதை நினைத்து அங்கிருந்து கிளம்பி செல்ல முயல அவனை கொத்தாக பிடித்தார் கதிரேசன்

  

”எலேய் எங்கடா போற”

  

”வேற எங்க, கழுதை கெட்டா குட்டிச்சுவரு, நான் என் வீட்டுக்குப் போறேன்”

  

”அப்படியா சரி வா நானே உன்னை உன் வீட்ல விடறேன்”

  

”எதுக்கு நானே போய்க்குவேன்”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.