அம்மாவிடம் முழு விபரத்தையும் சொல்லாமல் மேலோட்டமாக சொன்னேன். நான் சொன்னதை பொறுமையாக கேட்ட அம்மாவின் முகத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.
“ஏன் பவி, உனக்கு இந்த புத்தகம் படிக்கும் பழக்கம் எ[ப்படி வந்தது?”
“என்னம்மா கேள்வி இது? உங்க கிட்ட இருந்து வந்தது தான்...”
“சரி... உனக்கு இப்போ இருபத்திமூன்று வயசாக போகுது, இத்தனை வருஷத்தில் உங்க அப்பா புக் படித்து நீ பார்த்திருக்கிறாயா?”
நான் இல்லை என்பது போல் தலை அசைத்தேன்.
“கல்யாணமாகி ஒரு வருஷத்திர்க்குள்ளேயே நீ எனக்கு பிறந்தாச்சு, அப்போ எல்லாம் இப்படி கல்யாணத்திற்கு முன் பேச முடியாது... கிட்டத்தட்ட நீ பிறந்த பின் தான் எனக்கு உன் அப்பாவின் விருப்பு வெறுப்பு எல்லாம் தெரியுமே. எனக்கு பிடித்த விஷயம் அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நான் உன் அப்பாவை பிடிக்கலைன்னு சொன்னால் நீ சரின்னு சொல்வாயா?”
“அம்மா!”
இந்த உலகத்திலேயே சிறந்த ஆண்மகன் யார் என்று கேட்டால் என் அப்பாவை தான் சொல்வேன். அவரை போய்...
“என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? குடும்பம் என்றால் அப்படி தான் பவி... இரண்டு பேர் ஒரே மாதிரி கதையில் வருவதில் போல் எல்லாம் இருக்க முடியாது... ஒருவரின் ரசனையை, விருப்பத்தை உணர்ந்து அதற்கு மரியாதை கொடுக்கும் மனம் தான் வேண்டும். உனக்கு பிடிச்ச பாட்டு, உனக்கு பிடிச்ச கதை எல்லாம் சரி... என்றாவது அவருக்கு பிடிச்ச விஷயத்தை விஜய் பேசினாரா?”
Very nice story...
உங்கள் எழுத்துகளில் ஏதோ ஒரு தனித்தும் இருக்கிறது என நினைக்கிறேன். படிப்பவர்கள் மனதை இலகுவாக்குகிறது.வாழ்த்துகள் பிந்து வினோத்
Very nice story